Connect with us

மாஸ் காட்ட நினச்சி பல்பு வாங்கிய அருண் விஜய்..எங்கடா தியேட்டர்ல ஒருத்தரையும் காணோம்!….

aruin vijay

Cinema News

மாஸ் காட்ட நினச்சி பல்பு வாங்கிய அருண் விஜய்..எங்கடா தியேட்டர்ல ஒருத்தரையும் காணோம்!….

பல நூறு படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் போராடி சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருப்பர் நடிகர் அருண் விஜய். 21 வயதில் சினிமாவுக்கு வந்தாலும் 40 வயது மேல்தான் இவருக்கு சுக்கிரதிசை துவங்கியது போல.

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார். அதன்பின் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஒரு விழாவில் பவுன்சர்கள் சூழ சிவகார்த்திகேயன் வருவதை பார்த்து ‘யாருலாம் மாஸ் ஹீரோன்னு கெத்து காட்டுறது விவஸ்த இல்லாம போச்சு’ என டிவிட்டரில் கிண்டலடித்தவர் இவர்.

தற்போது இவரின் நடிப்பில் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி வரும் அளவுக்கு பிஸியான நடிகராக மாறியுள்ளார். இவரின் நடிப்பில் உருவான ‘சினம்’ திரைப்படம் இன்று வெளியானது.

தற்போதெல்லாம் ரஜினி, அஜித், விஜய், சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாளில் அதிகாலை 4 அல்லது 5 மணி காட்சி ஒன்றை ரசிகர்களுக்காக திரையிடுவார்கள். சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு அப்படி அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. அவ்வளவு ஏன், ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ‘கேப்டன்’ படம் வெளியான போதும் அதை செய்தார்கள்.

sinam

அந்த ஆசை அருண் விஜய்க்கும் வந்துவிட்டது போல.. அவர் நடிப்பில் இன்று வெளியான சினம் படத்திற்கு சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் காலை 8 மணி சிறப்பு காட்சிக்கு திட்டமிட்டனர். ஆனால், தியேட்டர்களில் இந்த படத்தை பார்க்க யாரும் வராமல் போனதால் காட்சியை ரத்து செய்துள்ளனர்.

இதையடுத்து, ஹீரோவாக பில்டப் செய்யப்போய் அதுவே அவர்களுக்கு நெகட்டிவாக அமைகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top