தனுஷ் கனவுல இப்படி மண்ணை போட்டுட்டாரே!.. அஜித்தை இப்போதைக்கு நெருங்க கூட முடியாது போல!..

ஹீரோவாகவும் இயக்குநராகவும் நடிகர் தனுஷ் வரிசையாக பல படங்களில் பணியாற்றி வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்துடன் போட்டியாக இட்லி கடையை களமிறக்க நினைத்தார். கடைசியில், பைவ் ஸ்டார் கதிரேசன் பஞ்சாயத்துக் கிளம்ப மும்பைக்கே பறந்துவிட்டார்.
அஜித் குமாரை வைத்து ஒரு படத்தை தனுஷ் இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், இன்னும் சில வருடங்களுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் பிடியில் இருந்து அஜித் குமார் வெளியே வரமாட்டார் என்றே தற்போது குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸுக்குப் பிறகு சினிமா வட்டாராமே பரபரப்பாக பேசி வருகிறது.

அஜித் ரசிகர்கள் இதுவரை அமர்க்களம், தீனா, அட்டகாசம், பில்லா, ஆரம்பம், மங்காத்தா போன்ற படங்களைத் தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அத்தனை படங்களையும் ஒருசேர பார்த்தது போல குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்துள்ள நிலையில், மறுபடியும் அவர் இயக்கத்தில் தான் அஜித் குமார் நடிப்பார் என்றும் தனுஷ் இயக்கத்தில் எல்லாம் அஜித் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.
தனுஷ் மீண்டும் தன்னை வைத்தோ அல்லது தனது அக்கா மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் 2 படத்தை வேண்டுமானால் எடுக்கட்டும் அஜித் பக்கம் எல்லாம் வந்து அவரையும் கெடுக்க வேண்டாம் என ரசிகர்களும் ஆதிக் பக்கம் தான் பலமாக நிற்கின்றனர்.
குட் பேட் அக்லி திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்றும் இனிமேல், அஜித் குமாரின் ஆட்டமே தமிழ் சினிமாவில் வேறமாறி இருக்கப் போகுது எனக்கூறுகின்றனர்.