விஜய் விஷயத்துல இப்படி நடந்துச்சுனா வீடியோவே போடுவாரு! யாரு அஜித்தா? பிரபலம் சொன்ன தகவல்

Vijay Ajith: எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் இவர்கள் வரிசையில் பல ஆண்டுகள் சினிமாவில் கொடிகட்டி பறப்பவர்கள் என்றால் அஜித் - விஜய்தான். இருவருமே ஒரே நேரத்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார்கள்.

ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படம்தான் அது. அதில் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். அதன் பிறகு அவரவர் கெரியரில் பிஸியாக இருந்துவிட இப்போது சினிமாவில் இருபெரும் தூண்களாக காட்சியளிக்கிறார்கள். இருவருக்குமே ரசிகர் பட்டாளம் ஏராளம்.

இதையும் படிங்க: டல்லடிக்கும் சிறகடிக்க ஆசை… கொஞ்சம் ஸ்பீட் ஏத்துங்கப்பா… கடுப்பில் ரசிகர்கள்

ஆரம்பத்தில் விஜய் அஜித் என இவர்களுக்குள்தான் போட்டிகள் இருந்தன. ஆனால் அது ரஜினி விஜயாக மாறியதில் இருந்து அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கும் இன்னொரு பக்கம் ரஜினி ரசிகர்களுக்கும் சமமாக ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இணையத்தில் சென்று பார்த்தாலே அஜித் ரசிகர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ரசிகர்களை அஜித் சரியாக பயன்படுத்தவில்லை என பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். அஜித்தை பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் அடுத்த நொடியில் இருந்து சொன்னவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி விடுகின்றனர்.

இதையும் படிங்க: கஷ்டப்பட்டு நடித்த கமலின் பட வசூலை அசால்டாக முறியடித்த ராமராஜனின் படம்…

அந்தளவுக்கு வெறி கொண்ட ரசிகர்களாக அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அஜித் அவர்களுக்காக என்ன செய்திருக்கிறார்? ரசிகர்கள் வேண்டாம் என்றால் இந்த ஃபீல்ட விட்டு போய்விடுங்கள் என செய்யாறு பாலு கூறினார். மேலும் விஜய் அரசியலுக்கு அஜித் ரசிகர்கள் சப்போர்ட் பண்ணுவார்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த செய்யாறு பாலு ‘ஜன நாயகத்தில் அஜித் சரியாக கடைப்பிடிக்கிற ஒரே விஷயம் ஓட்டுபோடுவதுதான். அதை தவிற அரசியலில் என அவரின் பங்கு இருக்காது. அதனால் விஜய் அரசியல் நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக அஜித் போட்டோவை யாராவது பயன்படுத்தினார்கள் என்றால் கண்டிப்பாக அஜித் வீடியோ போட்டு இப்படி செய்யாதீர்கள் என சொல்லுவார்’ என செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: மார்க்கெட் போனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மம்மூட்டி!.. முதலில் ஜோதிகா இப்போ எந்த நடிகை தெரியுமா?

 

Related Articles

Next Story