ரஜினியை ஹீரோவாக்க எந்த டைரக்டருக்குமே மனசு இல்லையாம்... ஆனா எப்புட்றா அது...?

by sankaran v |   ( Updated:2024-08-12 14:31:42  )
Rajni
X

Rajni

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 25 படங்கள்ல வில்லனா நடிச்சிருந்தாரு. எந்த ஒரு நடிகரும் வில்லனா நடிச்சிட்டு ஹீரோவா நடிச்சா மக்கள் ஒத்துக்க மாட்டாங்க. அந்தக்காலத்தில் ரஜினியை ஹீரோவாக்க எந்த இயக்குனர்களுக்கும் மனசு வரலன்னு தனது கருத்துக்களை பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் மூவீஸ் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...

முதல்ல ரஜினி சார் ஹீரோவா நடிச்ச படம் பைரவி. அந்தப் படத்தின் இயக்குனர் அப்பா தான். எம்.பாஸ்கர். அப்பா ஸ்ரீதர் சார்கிட்ட 14 ஆண்டுகள் வேலை பார்த்தாங்க. அப்போ அசோசியேட்டா இருந்தாங்க. அந்த சமயத்துல வாய்ப்புகள் தேடும்போது அது எளிதில் கிடைக்கல.

ரொம்ப சிரமமா இருந்துச்சு. அப்போ அப்பா கூட துணை உதவியாளராக ஹமீது வேலை பார்த்தார். அவர் ஸ்ரீதர் சாரிடம் கேமரா அசிஸ்டண்டாக இருந்தவர். அப்போது மிகவும் சிரமமான சூழ்நிலை இருந்ததால ஹமீது சொன்ன ஆலோசனைப்படி துபாய் போயிடலாமான்னு யோசித்தார்.

கடைசியாக திருப்பதி போய் கடவுளிடம் தனது நிலையைப் பற்றி முறையிடுகிறார். அதன்பிறகு அந்த திருப்பதி லட்டு பிரசாதத்தை பிரபல தயாரிப்பாளர் கலைஞானத்தை சந்தித்துக் கொடுக்கிறார். அப்போ அவர் பைரவி படத்துக்கு இயக்குனரைத் தேடிக்கிட்டு இருக்காரு.

அப்போ அவர் மைன்ட்ல இவரை ஏன் இயக்குனராகப் போடலாமேன்னு நினைச்சிருக்கார். இன்னொரு விஷயம் என்னன்னா இந்தக் கதையை எழுதியவர் கலைஞானம் தான். அவர் ஏற்கனவே இதுபற்றி அப்பாவுடன் டிஸ்கஷன் பண்ணியிருக்கார்.

Bairavi

Bairavi

அதனால இந்தக் கதை அவருக்கு நல்லா தெரியும்கறதால அவரையே டைரக்டராக்க முடிவு செய்தார். ஸ்ரீதர் சார்கிட்ட 14 ஆண்டுகள் வேலை பார்த்துருக்காரு. அதனால இவரை நம்பி இந்தப் படத்தை ஒப்படைக்கலாம்னு நினைச்சார். இன்னொன்னு அன்னைக்கு அவருக்கு புது இயக்குனர் தான் தேவைப்பட்டது. ஏன்னா அவரோடது சின்ன பட்ஜெட்தான். அப்படி தொடங்கினது தான் பைரவி.

ரஜினியை ஹீரோவாக்கற எண்ணம் கலைஞானம் சாருக்கு வந்தது. அப்போ ரஜினி சார் அபூர்வ ராகங்கள்ல அறிமுகமாகி 25 படங்களில் வில்லனாகத் தான் நடிச்சாரு. அப்போ எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், எஸ்எஸ்ஆர்னு அழகான ஹீரோக்களைத் தான் சினிமாவில் செலக்ட் பண்ணினாங்க.

அந்தக் காலகட்டத்தில் வில்லனாக இருந்து ஹீரோவாக மாறினா மக்கள் ஒத்துக்கவே மாட்டாங்க. அதை உடைத்தவர் ரஜினி சார் தான். அதுக்குக் காரணம் அப்பா அந்தப் படத்தை எடுத்த விதம். படத்தோட வெற்றி. 'நண்டூறுது', 'கட்டப்புள்ள குட்டப்புள்ள'ன்னு சூப்பரான பாடல்கள் அந்தப் படத்தில் தான் வருது. இதுல கால் இல்லாம நடிக்கிறாரு.

'முள்ளும் மலரும்' படத்துல கை இல்லாம நடிக்கிறாரு. அதனால மகேந்திரனும், அப்பாவும் சந்தித்து கதையைக் கேட்டு, சரி ரெண்டும் வேற வேற. தைரியமா எடுக்கலாம்னு எடுத்தாங்க. பர்ஸ்ட் அவருக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்தது பைரவி தான். ஒரு நல்ல டைரக்டர் அப்படி படம் எடுத்ததால தான் இன்னிக்கு வரைக்கும் அவர் சூப்பர்ஸ்டாரா இருக்காரு.

அப்பாவோட பேரு அதுக்கு அப்புறம் தெரியாம இருக்கு. ஆனா அதுக்கு என்ன காரணம்னு தெரியல. ஆனா இது திட்டம் போட்ட இருட்டடிப்பு. பாலசந்தர் முதலில் அபூர்வ ராகங்கள்ல அறிமுகப்படுத்துனாரு. அப்புறம் அவர் மூன்று முடிச்சு, அவர்கள்னு படம் எடுத்தாரு. அதுல சின்ன சின்ன ரோல்லயும், வில்லனாகவும் ரஜினி நடிச்சாரு.

அந்தக் காலகட்டத்துல ரஜினியை ஹீரோவாக்கறதுக்கு எந்த டைரக்டர்ஸ்சுக்கும் மனசுல தோணல. அப்பாவுக்கும் அந்தப் படம் தான் பர்ஸ்ட் படம். அதனால அந்தப் படத்தை அவர் ஒரு சேலஞ்சா எடுத்துப் பண்ணினார். ரஜினி ஹீரோவா இருந்தா என்னன்னு அதை ஒரு சவாலா எடுத்து ஜெயிச்சிக் காட்டுனாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story