அஜித் படத்தால் தமிழ் க்ளோஸ்… அல்லு அர்ஜூனால் தெலுங்கில் காலி… என்ன சேதி தெரியுமா?

pushpa
Kollywood: கடந்த ஒரு வருடம் ஆக கோலிவுட்டில் இல்லாத ஒரு விஷயம் தற்போது தெலுங்கு சினிமாவிலும் காலியாகி இருக்கும் தகவல் வைரல் ஆகி வருகிறது.
துணிவு vs வாரிசு ரிலீஸ்
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியிடும்போது முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க தான் ரசிகர்கள் மிகப்பெரிய அளவு ஆர்வம் காட்டுவார்கள். அதற்காக அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே அதிகாலை 4 மணி காட்சிகள் நடத்தப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்த அசம்பாவிதத்தில் ரசிகர் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் தமிழகத்தில் இனி அதிகாலை காட்சிகள் திரையிடக்கூடாது என ரத்து செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து வெளியான எல்லா திரைப்படங்களுக்குமே அதிகாலை காட்சிகளை தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தாலும் அதற்கு இதுவரை ஒப்புதல் கொடுக்கப்படவில்லை. அதிகபட்சமாக காலை 7 அல்லது 9 மணி காட்சிகளை மட்டுமே திரையரங்குகள் திரையிட வேண்டும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: மனோஜுக்கு பம்பர் லாட்டரியால இருக்கு… கதிர் பிரச்னையை தீர்த்த அண்ணன்கள்… மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி!..
தெலுங்கானாவின் திடீர் அறிவிப்பு
இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலமும் இனி அதிகாலை காட்சிகளை திரையரங்குகள் திரையிடக்கூடாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தெலுங்கில் கடைசியாக வெளியான அதிகாலை காட்சியை புஷ்பா2 திரைப்படமாக அமைந்திருக்கிறது.
டிசம்பர் 5ஆம் தேதி நேற்று புஷ்பா 2 திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. இதற்காக முதல் நாள் முதல் காட்சிக்கு நிறைய ரசிகர்கள் குவிந்தனர். டிக்கெட் விலை மிகப் பெரிய அளவில் இருந்தும் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.
அந்த சமயம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரசிகை ஒருவர் இறந்துவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்தே இந்த திடீர் அறிவிப்பை தெலுங்கானா அரசு தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு மாநிலமும் இந்த முடிவை எடுத்திருப்பது குறித்து பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.