Cinema News
கல்யாணத்துக்கு நோ… முரண்டு பிடிக்கும் சரத்குமார் மகள்.. விஷாலமான நடிகர் நினைப்பு இருக்கும் போல…
தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த படத்தை தொடர்ந்து தாரை தப்பட்டை,விக்ரம் வேதா,சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கிடைத்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு நடித்துவிடுவார். பல படங்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டி இருக்கிறார். தமிழில் பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்-
இந்நிலையில், 37 வயதான வரலட்சுமி இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலே இருக்கிறார். ஆனாலும் அவருக்குக் கல்யாணம் செய்து வைக்க சரத்குமார், சாயா, ராதிகா மூன்று பேரும் இப்போது தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்களாம்.
மேலும், வரலட்சுமி – விஷால் இருவரும் காதலித்து வந்ததாகவும், பின் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் காதலை முறித்துக்கொண்டதாகவும் முன்னதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து, ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் தீர்த்து வைக்க முயற்சிகள் செய்யலாம் என வரலக்ஸ்மி தரப்பு முயற்சி மேற்கொண்டதாம்.
ஆனால் அத்தகைய முயற்சிகள் ஆரம்பத்திலேயே நோ சொல்லியாதல் பலனளிக்கவில்லையாம். இதனை தொடர்ந்து, சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு மணமகன் தேடுதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.