இந்த எல்.சி.யூலாம் வேணாம்… நான் மட்டும் தான் இருக்கணும்.. லோகேஷிடம் கறார் காட்டிய ரஜினிகாந்த்!
Rajinikanth LCU: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் தான் தலைவர்171. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டே துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் இந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்த் சில கண்டிஷன்களை போட்டு இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட் இயக்குனராக மாறி இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் மூலம் உச்ச புகழுக்கு சென்றவர். விக்ரம் படத்தின் மூலம் முன்னணி இயக்குனர் என்ற இடத்தினை பிடித்தார். விக்ரம் மற்றும் கைதி படத்தில் சில காட்சிகள் ஒருவாறு அமைத்து இருந்தார்.
இதையும் படிங்க:போனஸ் மேல போனஸ அள்ளி வீசும் சன்பிக்சர்ஸ்…எல்லாம் ஜெயிலர் செஞ்ச வேலைதான்…
ஹாலிவுட் ஸ்டைலில் இனி என்னுடைய படங்களில் சில லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸாக எடுக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார். அதற்கேற்ப ரசிகர்களும் ஒவ்வொரு காட்சியினையும் டிகோட் செய்து இது எல்சியூவாக இருக்குமா? அது இருக்குமா என பல யூகங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் லியோ படத்தில் எல்சியூ இருக்குமா என கேள்விகள் எழுந்து இருக்கிறது. விக்ரம் கமல் இந்த படத்தில் சில காட்சிகள் வருவார் எனவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நேரத்தில் ரஜினிகாந்தின் 171வது படத்தினை லோகேஷ் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதையும் படிங்க: நானும் விஜயும் சண்ட போடுறது புதுசு இல்ல… அவருக்கு என்கிட்ட இது பிடிக்காது… ஓபனாக சொன்ன எஸ்.ஏ.சி
லோகேஷ் தன்னுடைய நாயகர்களுக்கு ப்ரோமோ வீடியோவை மாஸாக ரிலீஸ் செய்வார். ஆனால் ரஜினிக்கு அது மிஸ்ஸாகி விட்டதாக ப்லீங்கில் இருக்கிறாராம். இதுவும் இல்லாமல் தன்னுடைய படத்தில் லோகேஷின் பழைய பட சாயலாக வரும் எல்சியூ எதுவும் வரக்கூடாது என கறாராக சொல்லிவிட்டாராம்.
விக்ரம் படத்தில் சூர்யாவுக்கும், லியோ படத்தில் விக்ரம் கமல் வருவதாகவும் தகவல் வரும் நிலையில் 171வது படத்தில் அஜித்தை நடிக்க வைக்க ரஜினிகாந்த் விரும்புவதாகவும் இதற்காக லோகேஷ் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.