Connect with us

கதாநாயகிகளில் யாரும் செய்யாத சாதனை!.. ஸ்ரீதேவி கேரியரில் இப்படியெல்லாம் நடந்துச்சா!..

Cinema History

கதாநாயகிகளில் யாரும் செய்யாத சாதனை!.. ஸ்ரீதேவி கேரியரில் இப்படியெல்லாம் நடந்துச்சா!..

ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நடிகையாவார். இவர் 1969இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு இயக்குனர் இமயம் பாலச்சந்திரன் இயக்கத்தில் 1976 இல் வெளியான “மூன்று முடிச்சு” என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அன்றைய காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

sri devi

sri devi with mgr

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார். இந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் எதிர்பாராத வகையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

sri devi

sri devi with shivaaji

இவரின் சினிமா வாழ்க்கை 1976 முதல் 2018 முடிய வரையுள்ள காலங்களில் செய்த சாதனை இது வரை யாரும் முறியடிக்கபடாத சாதனையாக விளங்குகிறது. மூன்று தலைமுறைகளை சேர்ந்த ஆறு முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமைக்குரியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் சிவாஜியுடன் 1969இல் ”துணைவன்” திரைப்படத்தில் முருகன் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்பு எம்.ஜி.ஆர் உடன்” நம் நாடு” என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்பு 1976 இல் கதாநாயகியாக அறிமுகமாகி ரஜினி கமல் இவர்களுடன் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

sri devi

sri devi with rajini and kamal

பின்னர்2012 ஆம் ஆண்டு வெளியான ” இங்கிலீஷ் விங்கிலீஷ்” என்னும் திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடித்தார். பின்னர் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான ”புலி” என்ன திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்தார். இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர் ,சிவாஜி, ரஜினி ,கமல், அஜித், விஜய் ஆறு நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமைக்குரியவர் நடிகை ஸ்ரீதேவி.

sri devi

sri devi with vijay and ajith 

இதுபோன்று வேறு எந்த நடிகையும் நடித்தது கிடையாது இனிமேலும் நடிக்கவும் முடியாது. ஸ்ரீதேவி அடுத்து நடிகை மீனா எம்ஜிஆரை தவிர்த்து மீதம் ஐந்து நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். இதைத் தவிர நடிகை குணசித்திர நடிகை, நகைச்சுவை நடிகை என்ன பன்முகம் கொண்ட” ஆச்சி மனோரமா ”இவரும் ஆறுதலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top