தாஜ்மஹாலில் சென்று வேலையை காட்டி இருக்காரே… காதலர் தின படத்தில் நடந்த சுவாரஸ்யம்…

TajMahal: காதலர் தினம் திரைப்படத்தில் ரொம்பவே அப்ளாஸ் வாங்கிய நிறைய சீன்கள் இருந்தாலும் தாஜ்மஹால் இருக்கும் காட்சிகள் மிகப்பெரிய அளவில் லைக்ஸ் குவித்தது. ஆனால் அதற்கு பின்னர் இய்க்குனர் ட்விஸ்ட்டை வைத்து இருக்கிறார்.

1999ம் ஆண்டு உருவான திரைப்படம் காதலர் தினம். இப்படத்தினை எ.எம்.ரத்னம் தயாரிக்க கதிர் இயக்கி இருந்தார். குணால், சோனாலி பிந்த்ரே நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்றி இருப்பார். இப்படத்தில் தான் ரசிகர்களுக்கு இண்டர்நெட் குறித்து முதலில் சொல்லப்பட்டது என்றே சொல்ல வேண்டும். டைட்டானிக் லியோனார்டோ டிகாப்ரியோ கதாபாத்திரத்தினை மையப்படுத்தும் விதமாக கவுண்டமணி கேரக்டர் அமைக்கப்பட்டு இருக்கும்.

இதையும் படிங்க: இவ்வளவு டைட்டா போட்டா ஹாட் பீட் எகிறுது!.. அரை ஜாக்கெட்டில் அழகை காட்டும் தமன்னா!..

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருப்பார். எல்லா பாடல்களையும் வாலி எழுதி இருப்பார். கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாக அமைந்தது. அதில் ஒரு பாட்டு தான் ரோஜா ரோஜா. இந்த பாடலில் பெருவாரியான சீன்கள் தாஜ்மஹாலை சுற்றியே அமைக்கப்பட்டு இருக்கும். பார்ப்பதற்கே ரம்யமான காட்சிகளாக இருக்கும்.

ஆனால் இதற்கான அனுமதி கேட்ட போது கிடைக்காமல் போனதாம். இதனால், ஹேண்ட் ஹெல்ட் கேமராவில் ரகசியமாக பிளான் செய்து ஷூட் செய்தாராம் இயக்குநர் கதிர். அதேபோல், பின்னால் இருக்கும் நதியில் ரோஜாக்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தவர், 500-க்கும் மேற்பட்ட தனி ரோஜாக்களை வைத்து எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: அய்யயோ அதெல்லாம் வேணாம்… அதிர்ச்சியான விஜய்.. இப்படிப்பட்டவரா டேனியல் பாலாஜி?!

 

Related Articles

Next Story