Good Bad Ugly: அஜித் மட்டுமா? ‘குட் பேட் அக்லி’ என மூன்று கேரக்டர்களிலும் கலக்கிய நடிகர்களின் லிஸ்ட் இதோ

by Rohini |   ( Updated:2025-04-10 04:52:00  )
ajithnew
X

ajithnew

Good Bad Ugly: அஜித் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம் குட் பேட் அக்லி. கடந்த பொங்கல் அன்றே ரிலீஸாக வேண்டிய திரைப்படம். ஆனால் விடாமுயற்சி ரிலீஸ் பிரச்சினையால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள். விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றியது என்றுதான் சொல்ல வேண்டும்.

வித்தியாசமான அஜித்தின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு கைக் கொடுக்கவில்லை. அதனால் விட்டதை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று இறங்கி சிக்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறது குட் பேட் அக்லி. படத்தின் பேருக்கு ஏற்ப மூன்று வேடங்களில் அஜித் நடித்திருப்பதாக தெரிகிறது. நல்லவனாக கெட்டவனாக மோசமானவனாக என மூன்று விதமான கேரக்டர்களில் அஜித் நடித்துள்ளார்.

இதே போல் எந்தெந்த நடிகர்கள் குட்டாகவும் பேடாகவும் அக்லியாகவும் நடித்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க போகிறோம். முதலாவதாக ரஜினி. இவர் நடித்த பெரும்பாலான படங்களில் நல்லவனாக ஹீரோவாகத்தான் ரஜினி நடித்திருக்கிறார். ஆனால் எந்திரன் படத்தில் வில்லனாகவும் நடித்திருப்பார். அதே சமயம் அக்லியான நெற்றிக்கண் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார்.

அடுத்ததாக கமல். ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் தசவதாரம் படத்தில் வில்லனாக ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதை போல் அக்லியாக சிகப்பு ரோஜாக்கள் படத்தில் பெண்கள் விஷயத்தில் ஒரு மோசமான கேரக்டரில் நடித்திருப்பார். அடுத்ததாக விஜய். தளபதியாக ஹீரோவாக நடித்து ஜெயித்தவர் விஜய். ஆனால் வில்லனாக ஒரு படத்தில் முயற்சி செய்தார். அதில் குறிப்பிடத்தக்கது கோட் படம். அதோடு அக்லியாக அழகிய தமிழ் மகன் படத்திலும் முயற்சித்திருப்பார்.

இந்த லிஸ்டில் விஜய் சேதுபதியை இணைக்காமல் இருக்க முடியுமா? வில்லனாக மாஸ்டர் படத்தில் கலக்கிய விஜய்சேதுபதி அக்லியாக விக்ரம் படத்தில் நடித்து மிரட்டியிருப்பார். இவருக்கு என்ன மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் மனுஷன் மாஸ் காட்டிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை போல நடிகர் விக்ரம். இவரை மிகவும் நல்லவராக காட்டிய திரைப்படம் தெய்வத்திருமகள்.

அதற்கு நேர் எதிராக காட்டிய திரைப்படம் கோப்ரா. இரண்டையும் தாண்டி அக்லியாக அனைவராலும் வெறுக்கப்பட்ட கேரக்டர் இருமுகன் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த திருநங்கை கதாபாத்திரம்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக மூன்றையும் ஒரே படத்தில் காட்டி மாஸ் காட்டி வருகிறார் அஜித்.

Next Story