‘ஜிங்குச்சா’ பாடல் மட்டும் இல்ல.. நடனமும் இவர்தான்! இந்த வயசிலயும் பழச மறக்காத கமல்

by Rohini |   ( Updated:2025-04-19 05:53:47  )
kamal
X

kamal

Thug Life: நேற்று தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. மணிரத்தினம், கமல் ஆகியோர் கூட்டணியில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் அவர்கள் இணைந்துள்ளனர். நாயகன் திரைப்படம் எப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரியும். அதிலும் இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை தந்தது.

ஆனால் இது நாயகன் படத்தை மாதிரி இல்லாமல் வேறொரு படமாக தான் இருக்கப் போகிறது என நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏ ஆர் ரகுமான் கூறியிருந்தார். இந்த படத்திற்கு ரகுமான் தான் இசை. நேற்று வெளியான அந்த முதல் பாடலான ஜிங்குச்சா பாடலை கமலே எழுதி இருக்கிறார் .ரகுமான் இசையில் ஒரு திருமணம் சம்பந்தப்பட்ட பாடலாக இது அமைந்திருக்கிறது.

பாடலில் சிம்புவின் நடனம் நீண்ட நாளுக்கு பிறகு ரசிகர்களுக்கு ஒரு குதூகலத்தை கொடுத்து இருக்கிறது. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப் பாடலை எழுதியது மட்டும் கமல் இல்லை, அவருக்கு உண்டான ஸ்டெப்பை போட்டதும் அவரே தான் என ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் நடிகராவதற்கு முன்னாடி கமல் ஒரு நடன இயக்குனராக தான் இருந்திருக்கிறார்.

டான்ஸ் குரூப்பில் நடனமாடி அதன் பிறகு நடன இயக்குனராக மாறி அதன் பிறகு தான் நடிகராக மாறினார் கமல் .அதனால் நடனமும் அவருக்கு அத்துபிடி என்பது அனைவருக்குமே தெரியும். அது இப்போது இந்தப் பாடலில் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது. பாம்பேயில் உள்ள நடன இயக்குனர்தான் இந்தப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராம். இதில் கமல்ஆடிய நடனத்தை கமலே வடிவமைத்து ஆடி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. பன்முக கலைஞர் என்பதற்கு இதைவிட வேற எந்த உதாரணமும் இருக்க முடியாது.

Next Story