சிக்ஸ் பேக் மட்டுமா? அதுலயும் தனுஷ் தான் நம்பர் ஒன்.. இவர் வச்ச புள்ளி

by Rohini |   ( Updated:2025-04-28 07:30:34  )
dhanush
X

dhanush

Dhanush: ஹீரோவுக்கு என சில தகுதிகள் இருக்கும். ஆனால் அது இருந்த காலகட்டத்தில் தகுதி என்ன தகுதி திறமை இருந்தால் போதுமே என தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி இந்த சினிமாவில் நுழைந்து சாதித்து காட்டியவர் நடிகர் தனுஷ்.

அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஒரு விடலை பள்ளி சிறுவனாக துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார் தனுஷ். அதிலிருந்து தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பாலும் தன்னுடைய அபாரமான நடிப்பாலும் இன்று உலக அளவில் பெயர் வாங்கி இருக்கிறார் தனுஷ்.

மன்மத ராசா பாடலில் அவர் ஆடிய அந்த துடிப்பான நடனம் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒன்று. அதிலிருந்து அவர் இந்த தமிழ் சினிமாவில் ஒரு செல்ல பிள்ளையாகவே மாறிவிட்டார். தற்போது ஒரு இயக்குனராக பாடகராக பாடல் ஆசிரியராக தயாரிப்பாளராக பன்முக திறமை கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்து வருகிறார் தனுஷ்.

உலகமே வியக்கும் அளவுக்கு அவருடைய நடிப்பு புகழ் பெற்றது. பல விருதுகளை அள்ளிய திரைப்படங்களிலும் நடித்து விட்டார். மாஸ் கிளாஸ் என எல்லா துறைகளிலும் கால் பதித்து விட்டார் தனுஷ். இவ்வளவு சின்ன வயதிலேயே இத்தனை புகழை அடைந்தும் அவரிடம் இருக்கும் பணிவு என்றுமே மாறாது.

தன்னடக்கமாகவும் அனைவரிடமும் சகஜமாக பேசுவதிலும் ஒரு தலை சிறந்த மனிதர் என்பதையும் அவ்வப்போது நிரூபித்து வருகிறார் தனுஷ். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் திரைப்படம் இட்லி கடை. தெலுங்கில் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவக்குமார் தன்னுடைய மகனும் நடிகருமான சூரியாவை பற்றி ரெட்ரோ திரைப்பட விழாவில் பேசி இருந்தார்.

அதாவது தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது சூர்யா தான் என கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார் சிவக்குமார். அதற்கு பதிலடி கொடுத்த விஷால் சூர்யாவுக்கு முன்பே முதன் முதலில் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் தனுஷ் தான் என கூறினார் விஷால். அதன்பிறகு தான் சத்யம் திரைப்படத்தில் நான் வைத்தேன் என்று சிவக்குமார் கருத்துக்கு எதிராக கூறி இருந்தார் விஷால்.

இந்த நிலையில் சிக்ஸ் பேக் மட்டும் இல்லை ரீ ரிலிசிலும் தனுஷ் தான் முதல் நடிகர் என கமலா திரையரங்க உரிமையாளர் கூறி இருக்கிறார். சமீப காலமாக புதியதாக ரிலீசாகும் படங்களை விட ரீ ரிலீஸ் ஆகும் படங்களுக்குத்தான் அதிக மவுசு. அந்த வகையில் ரீ ரிலீஸ் டிரன்டை முதன் முதலில் ஆரம்பித்தது தனுஷ் தான் என கமலா திரையரங்க உரிமையாளர் கூறுகிறார்.

வடசென்னை திரைப்படம் ரீ ரிலீசில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தான் ரஜினி கமல் விஜய் அஜித் என அவர்கள் படங்களெல்லாம் ஒவ்வொன்றாக இப்போது ரிலீஸ் செய்து இருக்கிறோம் என்று கூறினார் கமலா திரையரங்க உரிமையாளர்.

Next Story