ஜோவிகாவை காப்பாற்றிய வனிதா விஜயகுமார்?.. அப்போ இந்த வார பலியாடு அந்த போட்டியாளர் தானாம்!..
இந்த வாரமாவது வாயாடி மங்கம்மா ஜோவிகா பிக் பாஸ் வீட்டை பொட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு காலி செய்து விடுவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் அவங்க அம்மா வத்திக்குச்சி வனிதா விஜயகுமார் உள்ளே புகுந்து ஆட்டையை கலைத்து விட்டார் என ஷாக்கிங் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் விசித்ரா, பூர்ணிமா, விக்ரம், தினேஷ், மணி, ஜோவிகா மற்றும் அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில், அதில் குறைவான ஓட்டுக்களுடன் வனிதா மகள் ஜோவிகா தான் உள்ளார் என அன் அஃபிஷியல் போல்கள் மூலம் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: கார்த்தி இப்படி இன்னொரு படம் நடிப்பரா?!.. சிவக்குமார் செய்வது சரியா?!.. வச்சு வாங்கும் கஞ்சா கருப்பு!..
வழக்கமாக அப்படி வரும் கருத்துக் கணிப்பில் சிக்குபவர்கள் தான் பெரும்பாலும் அந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆகி வருகின்றனர். ஆனால், சில நேரங்களில் மட்டும் சில உள்ளடி வேலைகள் நடந்தால் அதில் மாற்றம் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வாரம் ஜோவிகாவுக்கு மக்கள் குறி வைத்து வெளியே அனுப்ப நிலையில், வனிதா விஜயகுமார் தனது மகளுக்காக போராடினார் என்றும் அதன் காரணமாக விக்ரம் இந்த வாரம் வெளியே போகப் போகிறார் என தற்போது தகவல்கள் கசிந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
இதையும் படிங்க: தம்பி நான் யாருன்னு தெரியுமா?!… கிரிக்கெட் வீரரிடம் வம்பிழுத்த நடிகர் திலகம்!…
COPYRIGHT 2024
Powered By Blinkcms