இனிமே மகனை நம்பி பிரயோஜனம் இல்லை!.. வரிசையா ஹீரோயின்களை இறக்கிய மெகா ஸ்டார்!.. இத்தனை பேரா?..

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சீவி அடுத்ததாக பிரம்மாண்டமாக விஷ்வம்பரா நடித்து வருகிறார். இந்த படம் சிரஞ்சீவியின் 156 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான சுமார் அரை டஜன் படங்கள் தோல்வியை தழுவி வந்தன. ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது மகன் ராம்சரணுடன் இணைந்து சிரஞ்சீவி நடித்த ஆச்சாரியா திரைப்படமும் பயங்கர ஃபிளாப் ஆனது.
இதையும் படிங்க: நெய்வேலியில் விஜய் செல்பி!… அட இதுக்கு பின்னாடி இப்படி ஒரு ஆச்சரிய காரணம் இருக்கா?
நயன்தாரா மற்றும் தமன்னாவை வைத்து சிரஞ்சீவி பாகுபலி ரேஞ்சுக்கு நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் அமிதாபச்சன், விஜய் சேதுபதி உள்ளிட்ட மல்டி ஸ்டார்டர் நடித்தும் அந்த படம் எடுபடவில்லை. இந்நிலையில், அடுத்ததாக ஏகப்பட்ட ஹீரோயின்களை களம் இறக்கி வெற்றிக்கான முடிவில் முயற்சித்து வருகிறார் சிரஞ்சீவி என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி படம் திடீரென பிரேக் அடித்து நின்ற நிலையில், அந்த படத்திலிருந்து நடிகை திரிஷா சிரஞ்சீவி படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். லேட்டஸ்ட் தகவல் படி திரிஷா மட்டும் சிரஞ்சீவிக்கு ஜோடி இல்லை என்றும் விஜயின் கோட் படத்தில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரியும் ஹீரோயின் என்கின்றனர். மேலும் மிருணாள் தாகூர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போகிறாராம்.
இதையும் படிங்க: போட்றா வெடியா! ரிலீசான அஜித்- ஆதிக் படத்தின் டைட்டில்… என்னங்க இப்படி எல்லாம் இறங்கிட்டீங்க?
இந்த 3 பேர் மட்டுமின்றி இஷா சாவ்லா, சுரபி, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட நடிகைகளும் இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முறை வெற்றியை மிஸ் செய்து விடக் கூடாது என நடிகைகளை தாராளமாக இறக்கி விட்டாரா சிரஞ்சீவி என டோலிவுட்டில் கிண்டல் செய்து வருகின்றனர்.