அயோத்திக்கு 10 பைசா கூட கொடுக்காத பிரபாஸ்!.. ஹனுமான் டீம் எத்தனை கோடி கொடுத்துருக்குன்னு பாருங்க!

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் அந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளார். கூடவே நடிகர் தனுஷ் தனது மகனுடன் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளார்.
அமிதாபச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் பலர் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுள்ளனர். கங்கனா ரனாவத் ராமர் கோயிலுக்கு சென்றவுடன் வாட்டிகனில் இருக்கும் தேவாலயத்துக்கு நிகரான கோயில் இது என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் ரேஸில் விஜய்க்கு புடிச்சது இந்த படம் தானாம்!.. ஸ்டன்ட் மாஸ்டர் சொன்ன சூப்பர் மேட்டர்!..
மலையாள நடிகரான மோகன்லால், தெலுங்கு நடிகர்களான ராம் சரண், பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலருக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்த பிரபாஸ் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு 50 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதாக தகவல் ஒன்று பரவியது. ஆனால் அப்படி எந்த ஒரு தொகையையும் பிரபாஸ் கொடுக்கவில்லை என அவரது குழு திட்டவட்டமாக மறுத்து விட்டது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் போல சிங்கராக மாறிய சந்தானம்!.. வாய்ஸ் சகிக்கல என கலாய்க்கும் நெட்டிசன்கள்!..
இந்நிலையில், கடந்த பொங்கலுக்கு பான் இந்தியா படமாக வெளியான ஹனுமான் படம் நார்த்தில் நல்லா ஓடி வரும் நிலையில், 180 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 5 ரூபாய் வீதம் ராமர் கோயிலுக்கு நன்கொடை வழங்கி உள்ளனர். ஒட்டுமொத்தமாக 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. அதிலிருந்து 2.6 கோடி ரூபாயை ஹனுமான் படக்குழுவினர் ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர்.