ராஜமௌலி படத்தில் 'இந்த' பயங்கர வில்லனா.?! 90's கிட்ஸ் இவர மறக்க மாட்டாங்க.!

by Manikandan |
ராஜமௌலி படத்தில் இந்த பயங்கர வில்லனா.?! 90s கிட்ஸ் இவர மறக்க மாட்டாங்க.!
X

பாகுபலி பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றிக்காக ராஜமௌலி RRR திரைப்படத்தை இயக்கி அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அந்த திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியாகவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

rrr movie

இந்த படத்தை அடுத்து ராஜமௌலி மகேஷ்பாபுவின் நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் காட்டுப் பகுதியில் நடக்கும் ஒரு திரைப்படமாக டார்ஜான் போன்ற திரைப் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

விரைவில், இதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் விக்ரம் பெயர்கூட இடம் பெற்றிருந்தது.

rrr movie

தற்போது, இந்த படத்தில் வில்லனாக நடிக்க 'கோபிசந்த்' அவர்களிடம் படக்குழு உறுதி செய்துள்ளதாம். இவர், யார் என்றால் ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ஜெயம் படத்தில் பயங்கர வில்லனாக நடித்து 90's கிட்ஸ் மத்தியில் பிரபலமான நடிகர் ஆவார். அதன் பின்னர், தெலுங்கு பக்கம் சென்று அங்கு தற்போது நல்ல கதாநாயகனாக வளர்ந்து விட்டார்.

இதையும் படியுங்களேன்- வைரமுத்து வரிகளே வேண்டாம்.! உதறி எறிந்த ஏ.ஆர்.ரகுமான்.! உளறிய இயக்குனர்.!

ராஜமௌலி திரைப்படம் எப்படியும் தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகும். ஆதலால். இந்த பட வில்லனை மீண்டும் தமிழுக்கு ராஜமௌலி கொண்டு வந்துள்ளார் என்றே கூறலாம்.

Next Story