Categories: latest news

அஜித்துக்கு எங்கடா அறுவை சிகிச்சை நடந்துச்சு? இதுக்கு நீங்க பிச்ச எடுக்கலாம்.. பொளந்து கட்டிய பிரபலம்

Actor Ajith: நேற்றிலிருந்து இணையதளம் முழுவதும் அஜித்தை பற்றிய செய்திகள் தான் நிரம்பி வழிகின்றது. திடீரென அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வழக்கமான உடல் பரிசோதனைக்காகத்தான் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் ஆரம்பத்தில் செய்திகள் வெளியானது.

ஆனால் நேரம் ஆக ஆக அஜித்தை பற்றி வந்த செய்திகள் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருக்கு மூளையில் சிறு கட்டி இருந்ததாகவும் அதனால் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் நான்கு மணி நேரம் அந்த அறுவை சிகிச்சை நடந்ததாகவும் இப்போது அஜித் நலமுடன் இருக்கிறார் என்றும் செய்தி வெளியானது.

இதையும் படிங்க: அஜித்துக்கு என்ன ஆச்சு? வாய் திறக்காத சுரேஷ் சந்திரா… உண்மையை உடைத்த பிரபலம்..

இதைக் கேட்டதும் அஜித் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கமெண்டுகள் மூலம் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான ஜெய்சங்கர் சில தகவல்களை கூறி இருக்கிறார். அதாவது அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை எல்லாம் செய்யவில்லை என்றும் சாதாரண உடல் பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு வந்தார் என்றும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் இப்படி தொடர்ந்து அஜித்தை பற்றி பல விமர்சனங்களை முன்வைக்கும் youtube சேனல்களையும் விமர்சகர்களையும் ஜெய்சங்கர் அந்த பேட்டியின் மூலம் பொளந்து கட்டி இருக்கிறார். குறிப்பாக வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகிய இருவரையும் கண்டபடி திட்டி இருக்கிறார் ஜெய்சங்கர்.

இதையும் படிங்க: சைனிங் உடம்பை பார்த்தா என்னமோ பண்ணுது!.. விதவிதமா காட்டி சூடேத்தும் பிரியாமணி..

இப்படி பொய் வதந்திகளை பரப்பவதற்கு பேசாமல் போய் பிச்சை எடுக்கலாம் அல்லது செத்து விடலாம் என காரசாரமாக கூறியிருக்கிறார். ஒரு சாதாரண உடல் பரிசோதனைக்காக வந்த அஜித்தை பற்றி இந்த அளவுக்கு பேசும்பொழுது இதனால் அவருடைய குடும்பமும் அவரது ரசிகர்களும் எந்த அளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டாமா என்றும் கூறியிருக்கிறார். நான்கு மணி நேரத்தில் முடியக்கூடிய அறுவை சிகிச்சையா அது ?பொய் சொல்லுவதற்கு கூட கொஞ்சம் யோசிக்க வேண்டாமா என்றும் கேள்வி கேட்டிருக்கிறார்.

இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு செல்ல இருக்கும் அஜித் வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்காகவே இந்த பரிசோதனையை மேற்கொண்டார். இதை இந்த அளவு மீடியா பெரிது படுத்தியது மிகவும் வேதனைக்கு உள்ளதாகவே பார்க்கப்படுகிறேன். இனிமேலாவது மீடியாக்கள் கண்ணியத்துடன் செயல்பட்டு நடக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என ஜெய்சங்கர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி ரசிகர்களை கிளப்பிவிட்ட வேட்டையன் பட நடிகர்!.. கொஞ்சம் சும்மா இருங்க பாஸ்!…

Rohini

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

3 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

4 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

9 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

11 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

12 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

13 hours ago