பிக்பாஸுக்கு போனால் இந்த நிலைமைதான்! ராஜு இப்போ என்ன பண்ணிட்டுகிட்டு இருக்காருனு தெரியுமா?

raju
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி டி ஆர் பியில் எப்பொழுதும் முதலிடம் தான். ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் அடியெடுத்து வைக்க காத்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வருகின்றனர்.
அடுத்த எதிர்பார்ப்பு
ஆனால் கடந்த சீசனில் மட்டும்தான் பொதுமக்களில் இருந்து முதன் முறையாக ஒருவரை போட்டியாளராக தேர்ந்தெடுத்தது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. உலகம் முழுவதும் பிரபலமான இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றனர்.
இதையும் படிங்க :ப்ளீஸ்!..விஜய் மனசு உடைஞ்சி போயிடுவான்!.. அதமட்டும் சொல்லிடாதீங்க!. லியோனியிடம் கெஞ்சிய எஸ்.ஏ.சி…

raju1
கிட்டத்தட்ட இதில் கலந்துகொண்டு வெளியேறியவர்கள் பிரபல நடிகர்களாகவும் பிரபல இயக்குனர்களாகவும் பிரபல நடன இயக்குனர்களாகவும் மாறி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அவர்களை ஒரு புகழின் உச்சிக்கே கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. இதில் கலந்து கொள்ள வரும் அனைத்து போட்டியாளர்களும் சொல்வது மக்கள் மத்தியில் நான் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன் என்றுதான்.
சைலண்ட் கில்லர்
அந்த வகையில் கடந்த சீசனில் வெற்றியாளராக மகுடத்தை சூட்டியவர் ராஜு. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு எதிர்காலத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்கும் என அனைவராலும் நம்பப்பட்டு வந்தது. அதற்கு ஏற்ற வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் அவர் செய்த சில வேலைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இதையும் படிங்க :பாரதிராஜாக்கிட்ட வச்சிக்கிட்டா அவ்ளோதான்.. கன்னம் சிவக்க அடி வாங்கிய உதவி இயக்குனர்!..
ஆனால் அதன் பிறகு ராஜு என்னவானார் என்பது யாருக்குமே தெரியவில்லை. திடீரென விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சில சினிமா விழாக்களையும் தொகுத்து வழங்கினார். ஒரு பிரபல நடிகராக வருவார் என எதிர்பார்த்த மக்களுக்கு இப்படி ராஜுவை பார்த்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது..
இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனிடம் ராஜுவை பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். இப்பொழுது பிக் பாஸ் ராஜூ என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக்கே கேட்க அதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் ஒரு பெரிய கம்பெனியில் ஒரு படத்தை இயக்கும் பொறுப்பை ராஜு ஏற்று இருப்பதாகவும் அந்த கதை விவாதத்தில் பாக்யராஜிடம் ஆலோசனை நடத்திக் கொண்டு வருவதாகவும் சித்ரா லட்சுமணன் கூறினார்.

raju2
இதையும் படிங்க :ரஜினியாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!.. சண்டையில சட்ட கிழிஞ்சிரும் பரவால்லயா!..