இப்ப தாங்க தளபதி விஜய்... அப்பவே கெத்து காட்டிய டாப்ஸ்டார் பிரசாந்த்...!
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். விஜய் படத்தில் நீங்க நடிக்கிறீர்களான்னு கேட்கும்போது விஜயும், நானும் சேர்ந்து நடிக்கிறோம்னு புத்திசாலித்தனமாக பிரசாந்த் பதில் சொல்லி இருக்கிறார். இதுகுறித்து மேலும் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
90களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் பிரசாந்த். எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை கமலின் இடத்தைக் கார்த்திக் பிடிப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. ஆனால் கார்த்திக்கின் இடத்தை பிரசாந்த் பிடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
இதையும் படிங்க... கோட் படத்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா?!.. இதுதான் காரணமா?!.. உடைக்கும் பிரபலம்!..
மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வாரத்துக்கு ஒருநாள் இவருடன் வந்து போட்டோ எடுத்த ரசிகர்கள் எல்லாம் உண்டு. தென்மாவட்டங்களில் கார்த்திக், பிரசாந்துக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இரு ஹீரோக்களுமே தனது ரசிகர்களை சரியாகப் பயன்டுத்திக்கொள்ளவில்லை. தனுஷ் பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருந்ததால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். கட்சி, அரசியல், சமூகம் சார்ந்து போய்விட்டது. நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் அவர்கள் லெவலே வேற.
கோட் படத்தில் பிரசாந்துக்கு வலுவான கேரக்டராகத் தான் இருக்கும். அவர் அரசியலிலும் திருமாவளவனுடன் சேர்ந்து கட்சியில் இணைவாரா என்றும் பேசப்படுகிறது. சினிமாவிலும் பிரசாந்துக்கான இடம் இன்னும் காலியாக உள்ளது. அவர் சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் ரீ என்ட்ரி கொடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு தற்போது ரசிகர்கள் அதிகம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் 90களில் பிரசாந்துக்குத் தான் அதிக ரசிகர்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் அதிகம். குடும்ப பிரச்சனை காரணமாகத் தான் சினிமாவில் கவனத்தை இழந்தார். தற்போது விஜய் படம் மூலம் பிரசாந்த் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.