Cinema History
என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன ஒரு வார்த்தை!.. கடைசிவரை பின்பற்றிய எம்.ஜி.ஆர்…
திரையுலகில் சில நடிகர் கஷ்டப்பட்டு மேலே வருவார்கள். ஆனால், அவர்களின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் ஒரு மமதை வந்துவிடும். அவர்கள் மேலே வருவதற்கு உதவியவர்களை கூட கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு எந்த உதவியையும் செய்ய மாட்டார்கள். அதேபோல் தன்னை வாழவைத்த ரசிகர்களுக்கும் பெரிய முக்கியத்துவம் தரமாட்டார்கள். திரையுலகில் இப்படி பல நடிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், சில நடிகர்கள் பழசை மறக்காமல் இருப்பார்கள். தன்னை ஏற்றிவிட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். ரசிகர்களை மதித்து நடந்து கொள்வார்கள். இதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முக்கியமானவர். சாதாரண மக்களுக்கும், தன்னுடைய ரசிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். அவ்வளவு ஏன்?. அவர் காலத்தில் நடித்த தன்னுடைய சக நடிகர்களுக்கும் உரிய மரியாதையை கொடுத்தவர்.
இவர் இப்படி இருந்ததற்கு பின்னால் ஒரு நடிகர் இருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. அவர்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். எம்.ஜி.ஆர் நாடக நடிகராக இருந்த போது என்.எஸ்.கிருஷ்ணனிடம் பணிபுரிந்து வந்தார். எம்.ஜி.ஆருக்கு மாதம் ரூ.100 சம்பளமாக கொடுத்தார் என்.எஸ்.கிருஷ்ணன். ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்க துவங்கி பெரிய ஹீரோவாக மாறினார்.
அப்போது எம்.ஜி.ஆரை அழைத்த என்.எஸ்.கிருஷ்ணன் ‘ராமச்சந்திரா நீ நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ளாய். இப்போது நீ பெரிய ஹீரோ ஆகிவிட்டாய். கடைசி வரை நீ ஒருவனை மறக்கக் கூடாது. அவன்தான் உன் ரசிகன். ஒரு அணா, இரண்டு அணா என காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த ரசிகனை நீ மறக்கவே கூடாது. அவனுக்கு உன்னால் முடிந்த உதவிகளை கடைசிவரை செய்ய வேண்டும்’ என்று சொன்னாராம்.
அதை வேத வாக்காக எடுத்துக்கொண்ட எம்.ஜி.ஆர் கடைசி வரை அதை கடை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘துணிவு’ ல என்ன கதை?.. படப்பிடிப்பில் நடந்த கதையை புட்டு புட்டாக வைத்த அமீர்-பாவ்னி!.. அஜித் இப்படி பட்டவரா?..