கொடை வள்ளல் என்.எஸ்.கே குடை வள்ளலும் கூட!.. படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாடகங்களை தயாரித்து, இயக்கியும் இருக்கிறார். எம்.ஜி.ஆர் நாடகங்கங்களில் நடித்தபோது அவருக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் இருந்தவர். பல விஷயங்களிலும் எம்.ஜி.ஆரை வழி நடத்தியவர். இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை எம்.ஜி.ஆரிடம் விதைத்தவரே அவர்தான். இவரிடம் சென்று யார் என்ன உதவி கேட்டாலும் தன்னிடம் இருப்பதை அள்ளி கொடுப்பார்.
இவரை மக்கள் கலைவாணர் என அழைத்தனர். திரைப்படங்களையும் தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். யாரையும் காயப்படுத்தாமல் காமெடி செய்வார். இவரின் நகைச்சுவை காட்சிகளில் எப்போதும் மக்களுக்கான ஒரு கருத்தும், அறிவுரையும் இருக்கும். அதாவது, தனது காமெடி மூலம் நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை மக்களுக்கு சொன்னவர்.
திரையுலகை பொறுத்தவரை வள்ளல் என்றால் எல்லோரும் எம்.ஜி.ஆரை சொல்வர்கள். ஆனால், இந்த விஷயத்தில் அவருக்கு குருவே என்.எஸ்.கிருஷ்ணன்தான். அதனால்தான் அவர் மீது எம்.ஜி.ஆர் கடைசிவரை அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
ஒரு வழக்கில் சிக்கி சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபின் அவர் நடித்த திரைப்படம் நல்லதம்பி. அந்த படத்தில் ஒரு தாயும், அவரின் கை குழந்தையும் சில காட்சிகளில் நடித்தார்கள். மதிய நேரம் என்பதால் கலைவாணருக்கு மட்டும் ஒருவர் குடை பிடித்து நின்று கொண்டிருந்தார்.
கை குழந்தையுடன் வெயிலில் அந்த பெண் நிற்பதை பார்த்த எம்.ஜி.ஆர் ‘ஏப்பா குழந்தையோடு நிற்கும் அந்த அம்மாவுக்கு போய் குடை பிடி. எனக்கு வேண்டாம்’ என சொல்லி அனுப்பினார். அந்த பெண்ணுக்கு அன்று முழுவதும் அந்த நபர் குடை பிடித்தார். அன்று அந்த பெண்ணுக்கு ரூ.25 சம்பளம் பேசப்பட்டிருந்தது. ஆனால், கலைவாணர் நூறு ரூபாயை சம்பளமாக கொடுக்க சொன்னார். இதில் அந்த பெண் நெகிழ்ந்து போய் கலைவாணருக்கு நன்றி சொன்னாராம்.
எனவே கலைவணர் கொடை வள்ளல் மட்டுமில்லை. குடை வள்ளலும் கூட!..