எம்.ஜி.ஆரை அழவைத்த என்.எஸ்.கிருஷ்ணன்.. இப்படி ஒரு மனிதரா அவர்?!...

திரையுலகில் நாடக நடிகர், சினிமா நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். நல்ல கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை தனது நகைச்சுவைகளில் சொன்னவர் இவர். அதனால்தான் இவரை கலைவாணர் என ரசிகர்கள் அழைத்தனர்.

nsk

nsk

யார் மனதையும் நோகடிக்காமல் நகைச்சுவை செய்து ரசிகர்களை கவர்ந்தவர். எம்.ஜி.ஆருக்கு இவருக்கும் நல்ல நட்பு உண்டு. எம்.ஜி.ஆர் நாடங்களில் நடிக்கும்போதிலிருந்தே அவருக்கு குருவை போல பல விஷயங்களையும் அவருக்கு சொல்லிகொடுத்தவர். எம்.ஜி.ஆருக்கு முன்பே தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்த வள்ளல் அவர். தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை தானமாகவே கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். இவரை பார்த்துதான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமே எம்.ஜி.ஆருக்கு வந்ததாக சொல்வதுண்டு. எனவே, கலைவாணர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

nsk

nsk

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி மூன்று வருடங்கள் சிறையில் இருந்து பின் விடுதலையானார். சொத்துக்களை இழந்து, படவாய்ப்புகளை இழந்து உடல்நிலையும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அப்போது அவரை பார்க்கப்போன எம்.ஜி.ஆர் அவரின் உடல் நலத்தை விசாரித்துவிட்டு அவரின் தலையணையின் கீழ் ஒரு கட்டு பணத்தை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

எம்.ஜி.ஆர் கட்டு பணத்தை வைத்ததை பார்த்துவிட்ட கலைவாணர் ‘எதற்காக கட்டு கட்டாக பணத்தை கொடுக்கிறார். இது எனக்கு வேண்டாம். எனக்கு சில்லரை காசுகளாக கொடு.. இங்கு வருபவர்களிடம் கொடுக்க அதுதான் எனக்கு வசதியாக இருக்கும்’ என சொல்ல, எம்.ஜி.ஆரே அழுதுவிட்டாராம். 1957ம் வருடம் என்.எஸ்.கிருஷ்ணன் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story