Cinema History
“எம்.ஜி.ஆர்தான் என்னோட வாரிசு”… புரட்சித் தலைவர் குறித்து அன்றே கணித்த பிரபல நடிகர்…
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1930களில் திரையுலகில் கால் எடுத்து வைத்த என்.எஸ்.கிருஷ்ணன், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகராக திகழ்ந்தார். மேலும் தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு எதை பற்றியும் யோசிக்காமல் வாரி வழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்தார் என்.எஸ்.கே.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை பின்பற்றி வந்தவர்தான் எம்.ஜி.ஆர் என பல சினிமா கலைஞர்கள் கூறுவார்கள். மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று தமிழக மக்களால் புகழப்படும் எம்.ஜி.ஆர், கொடை வள்ளல் என பெயர் பெற்றவர். உதவி என்று வருபவர்களுக்கு வாரி வழங்குவதில் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் மக்களுக்காக பணியாற்றுவார் என்பதை அன்றே கணித்தது மட்டுமல்லாமல் தன்னுடைய வாரிசு எம்.ஜி.ஆர்தான் எனவும் கூறியிருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன்.
அதாவது தன்னுடைய மனைவியான டி.ஏ.மதுரத்திடம் “நான் இறப்பதற்கு முன்னால் என்னுடைய கலையுலக வாரிசு யார் என்பதை சொல்லிவிட்டுத்தான் போவேன். நான் இப்போது நினைத்துக்கொண்டிருக்கும் காரியங்களை நிறைவேற்றுவதற்கும், நான் இப்போது என்னென்ன நல்ல விஷயங்களை எல்லாம் செய்துகொண்டிருக்கிறேனோ, அதை எல்லாம் பிற்காலத்தில் செய்வதற்கு ஒரே ஒருத்தர் இருக்கிறார் என்றால் அது எம்.ஜி.ஆர்தான்.
இதையும் படிங்க: “எனக்கு அதுலாம் வேண்டாம், தயவுசெஞ்சு போயிடுங்க”… தயாரிப்பாளர் செய்த செயலால் கடுப்பான ரஜினி… என்னவா இருக்கும்??
அவர் மனது எப்படிப்பட்ட மனது என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆதலால் என்னை போல் மற்றவர்களுக்கு உதவுபவராக எம்.ஜி.ஆர் இருப்பார்” என என்.எஸ்.கிருஷ்ணன் அப்போதே கூறியிருக்கிறாராம். பின்னாளில் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக பொறுப்பேற்று மக்களின் மனதில் பொன்மனச் செம்மலாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.