எம்ஜிஆருக்கும் சக்கரபாணிக்கும் இருந்த பிரச்சினை? என்.எஸ்.கே மட்டும் இல்லைனா என்ன நடந்திருக்கும் தெரியுமா?

by Rohini |
nsk
X

nsk

எம்ஜிஆர் சினிமா வாழ்க்கையில் உறுதுணையாக இருந்தவர் கலைவாணர் என் எஸ் கே. இவரை தன் குருவாகவே நினைத்து வாழ்ந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய கொள்கை உதவி செய்யும் மனப்பான்மை இவற்றை பின்பற்றியே எம்ஜிஆர் தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்தார். அந்தக் காலத்தில் கலைஞர்களுக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் அதை என் எஸ் கே தான் தலையிட்டு தீர்த்து வைப்பார்.

என் எஸ் கே சொல்லுக்கு யாரும் குறுக்கே நிற்காமல் அதை வாக்காகவே நினைத்து அவருக்கு உண்டான மரியாதையை அந்த கால நடிகர்கள் கொடுத்து வந்தனர். அவருக்கு பிறகு எம்ஜிஆரை அவருடைய இடத்தில் வைத்து ரசிகர்களும் சரி மற்ற திரைப்பிரபலங்களும் சரி பார்த்து வந்தனர்.

இதையும் படிங்க: ரஜினியை வச்சி படம் எடுக்குறியா?!. தயாரிப்பாளரிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..

இந்த நிலையில் எம்ஜிஆர் வீட்டு விழா ஒன்றுக்கு வருகை தந்தார் என் எஸ் கே. எம்ஜிஆர் வீட்டில் பிரப எழுத்தாளரான மா லட்சுமணன் என்பவரும் இருந்தாராம். அந்த விழாவின்போது மேடை ஏறி பேசிய என் எஸ் கே ராமாயணத்தில் வரும் ராமன் லட்சுமணனை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர்களைப் போல் இப்போது நான் எம்.ஜி.ஆரையும் சக்கரபாணியையும் பார்த்து வருகிறேன்.

அந்த அளவுக்கு இந்த இரு சகோதரர்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள். இதுவரை இவர்களுக்குள் எந்த ஒரு சண்டையும் வந்ததில்லை. இதையே மக்கள் பெரும் பெருமையாக எண்ணி அவர்களைப் போல் நாமும் வாழ வேண்டும் என பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். இதே போல் அவர்கள் இன்னும் நீண்ட நாள் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறியிருக்கிறார் .

இதையும் படிங்க: இன்னும் எத்தனை நாளுக்குப்பா இழுப்பீங்க… கோபியால் கடுப்பான ரசிகர்கள்…

அவர் பேசி முடித்ததும் கீழே இறங்கிய பிறகு எழுத்தாளர் மா. லட்சுமணனிடம் நான் சொன்னது சரிதானா என கேட்டிருக்கிறார். அதற்கு லட்சுமணன் உண்மையைத்தானே சொல்கிறீர்கள்? இதில் என்ன இருக்கு என கேட்டாராம். அதற்கு என் எஸ் கே அப்படி இல்லை. சில காலமாக எம்ஜிஆருக்கும் சக்கரபாணிக்கும் இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வருகின்றன.

அது வெடித்து பூகம்பமாக மாறினால் அவர்களை சுற்றி இருப்பவர்களால் கூட அதை தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நேரத்தில் நான் இப்படி பேசியதால் அவர்கள் இருவரும் நம்மைப் பற்றி வெளி உலகினர் இந்தளவுக்கு நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அதை நாம் கெடுத்து விடக்கூடாது என்று மனம் மாறி சண்டை இல்லாமல் கூட வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் அல்லவா?

இதையும் படிங்க: டாப் 5 நடிகைகளின் 50வது படம் வெற்றியா? தோல்வியா?!.. தட்டி தூக்கிய தமன்னா!…

அதனால் தான் நான் இப்படி எல்லாம் அந்த மேடையில் பேசினேன் என கூறியிருக்கிறார். இதிலிருந்து என் எஸ் கே யின் அந்த சிந்தனை திறன் எப்பேர்பட்டது என்பதை நம்மால் அறிய முடிகிறது. இந்த தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.

Next Story