சூர்யா ரசிகர்களை கண்டபடி திட்டிய சூரி.! பேசி சமாளிசிட்ட விட்ருவோமா.?!
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான சூர்யா ரசிகர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.
ஆக்சன் , செண்டிமெண்ட் , கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. ப்ரியங்கா மோகன், சத்யராஜ், வினய், சூரி என பலர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்களேன் - பிரியங்காவை கட்டிலில் பிடித்து இழுக்கும் சூர்யா.! வெளியான சூப்பர் வீடியோ.!
இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசுகையில், படத்தை பற்றி பேசிவிட்டு, நடிகர் சூர்யா பெயரை குறிப்பிட்டார். உடனே ரசிகர்கள் கரகோஷமிட்டனர். சத்தம் அமைதியாகும் என பார்த்தல், ஆனால், அது நடக்கவில்லை. உடனே சட்டென கடுப்பான சூரி, அட சாண்டலங்களா கொஞ்சம் அமைதியாய் இருங்கடா என கூறினார்.
உடனே சுதாரித்துக்கொண்டு, இதுபோல அடுத்தடுத்த படங்கள்ல வாய்ப்பு கொடுங்க, இந்த சத்தம் திரும்ப திரும்ப கேக்கணும் அப்டினு சொல்லி சமாளித்துவிட்டு சென்றார். இப்படம் அடுத்த வாரம் மார்ச் 10 இல் திரைக்கு வரவுள்ளது. இப்படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.