Categories: latest news

TVK Vijay: இவர்களை விட பெரிய தலைவரா விஜய்?… த.வெ.க-வால் எனக்கு பாதிப்பா!… மீண்டும் சீண்டிய சீமான்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஜெயலலிதா, கருணாநிதியை விட பெரிய தலைவரா? என்று சீமான் பேசியிருக்கின்றார்.

விஜயின் அரசியல்: தமிழ் சினிமாவில் டாப் நடிகராக ஜொலித்து வரும் நடிகர் விஜய் திடீரென்று அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்கின்ற அரசியல் கட்சியை தொடங்கிய இவர் அதற்கான வேலைகள் அனைத்தையும் பரபரப்பாக செய்து வருகின்றார். கட்சியின் கொடி, பாடல், கொள்கை என அனைத்தையும் அறிமுகம் செய்த விஜய் தனது முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்திருந்தார்.

இதையும் படிங்க: Kanguva: அப்படி போடு!… கிரீன் சிக்னல் கொடுத்த தமிழக அரசு… கங்குவா படத்தின் FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?!..

முதல் மாநாடு: நடிகர் விஜய் அரசியலில் இறங்கியவுடன் வாழ்த்து தெரிவித்து வந்த பலரும் நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாட்டிற்கு பிறகு அப்படியே எதிராக மாறிவிட்டார்கள். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் மிக பிரம்மாண்டமாக தனது முதல் மாநாட்டை நடத்தி முடித்து இருந்தார் நடிகர் விஜய்.

இதில் பல கட்சிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பேசியிருந்தார். அதிலும் ஆளும் திமுக கட்சியை குடும்ப அரசியல் என்று நேரடியாகவே தாக்கி பேசியிருந்தது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் திமுக தொண்டர்கள் இதனால் சமூக வலைதள பக்கங்களில் விஜயை கண்டபடி ட்ரோல் செய்து வந்தார்கள். முதல் மாநாட்டிற்கு பிறகு அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் விஜய்க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள்.

சீமான் காட்டம்: முதல் மாநாட்டிற்கு முன்பு வரை தனது தம்பி என தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முதல் மாநாட்டிற்கு பிறகு நடிகர் விஜய் பேசியது கொஞ்ச நெஞ்சம் அல்ல. நடிகர் விஜய் குறித்தும் அவரது கொள்கை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். அதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று லாரி அடித்து செத்துப் போவாய், கூமுட்டை என்றெல்லாம் கூறி இருந்தது விஜய் ரசிகர்களையும் தமிழக வெற்றி கழக கட்சியின் தொண்டர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனால் அவர்கள் சீமானை கண்டபடி திட்டி தீர்த்து வந்தார்கள். ஆனால் நடிகர் விஜய் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து எந்தவித கருத்தையும் பதிவிடக்கூடாது என்று கூறியிருந்தார். அது மட்டுமா ஒரு படி மேலே சென்று அவரின் பிறந்தநாளுக்கு சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார்.

மீண்டும் மீண்டுமா? இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மீண்டும் விஜயை குறித்து விமர்சனம் செய்திருக்கின்றார். ‘ஜெயலலிதா, கருணாநிதியை விட பெரிய அரசியல் தலைவரா? அவர்கள் கூட்டிய கூட்டத்தை விட அதிக கூட்டம் விஜயின் மாநாட்டுக்கு வந்ததா?

இதையும் படிங்க: KGF: களவாணி படத்தில் நடித்திருக்கும் கேஜிஎஃப் யாஷ்… இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே…

பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடியவர்கள் அல்ல என்னை விரும்பும் மக்கள். தமிழக வெற்றி கழக கட்சியினால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கட்டாயம் பாதிக்காது. அப்படியே எங்களுக்கு வாக்கு வாங்கி தான் பாதிக்கும். ஆனால் உங்களுக்கு வாக்கே இல்லையே என்ன செய்வீர்கள்.. உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள விஜய் உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்காமல் எதற்காக தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்தார். அவரைவிட எனது கூட்டம் பெரியது. 8 கோடி மக்களுடன் தான் என்னுடைய கூட்டணி’ என்று மீண்டும் நடிகர் விஜயை வம்புக்கு இழுத்திருக்கின்றார் சீமான்.

ramya suresh

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago