ஆப்பு வைத்த நம்பர் நடிகை… விழிபிதுங்கி நிற்கும் இயக்குனர்….!

Published on: April 29, 2022
gossip
---Advertisement---

நம்பர் நடிகையை வைத்து ஒரு படத்தை எடுத்த பின்னர் தான் அந்த இயக்குனர் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன் பின்னர் அந்த நம்பர் நடிகையையே வளைத்து போட்டுவிட்டார் அந்த இயக்குனர். தற்போது இருவரும் காதல் ஜோடிகளாக ஊர் சுற்றி வருகிறார்கள்.

நம்பர் நடிகையை வைத்து இயக்குனர் இயக்கிய புதிய படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் நிச்சயமாக நல்ல வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் தான் அந்த இயக்குனர் பெரிய நடிகர் ஒருவரிடம் கால்ஷீட் வாங்கியுள்ளார்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள படம் அந்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனால் அப்செட்டில் இருக்கும் இயக்குனருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளதாம். அதாவது பெரிய நடிகரின் படத்தில் நம்பர் நடிகை தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு வற்புறுத்தி வருகிறதாம்.

ஆனால் நம்பர் நடிகையோ எனக்கு 10 கோடி ரூபாய் சம்பளமும், இயக்குனருக்கு 10 கோடி ரூபாய் சம்பளமும் கொடுத்தால் அந்த படத்தில் நடிக்கிறேன் என கூறி விட்டாராம். இதனை கேட்ட தயாரிப்பு தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த செய்தியை பெரிய நடிகரின் காதுக்கு தயாரிப்பு தரப்பு கொண்டு சென்றிருக்கிறது. உடனே பெரிய நடிகரும் சரிபட்டு வரவில்லை என்றால் இயக்குனரை மாற்றிக் கொள்ளுங்கள் என கூறி விட்டாராம். இதனால் அதிர்ச்சியில் உறைந்த இயக்குனர் எங்கே நம்பர் நடிகையால் தன் கெரியர் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயத்தில் உள்ளாராம்.

Leave a Comment