விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் மோத உள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து அஜித் விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால் ரசிகர்கள் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர்.
விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ உரிமையாளர் லலித் குமார் வெளியிட உள்ளார். அதே போல் “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். ஆதலால் “துணிவு” திரைப்படத்திற்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என பேச்சுக்கள் அடிப்பட்டன.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் “வாரிசு” படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு , தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் ஒன், ஆதலால் விஜய்க்குத்தான் அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும், இது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் பேச உள்ளதாக கூறினார். தில் ராஜூவின் இந்த பேச்சு அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இருவரில் யார் நம்பர் ஒன் என அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் இணையத்தில் விவாதங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சமீபத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய ஐந்து பகுதிகளில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் “வாரிசு” படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
இதையும் படிங்க: “பணம் வேணும் இல்லைன்னா விஷத்தை குடிச்சிடுவேன்”… தயாரிப்பாளர் செய்த அட்ராசிட்டீஸ்… இறங்கி ஆடும் பயில்வான்…
இந்த நிலையில் தற்போது “வாரிசு”, “துணிவு” ஆகிய திரைப்படங்களுக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய பகுதிகளில் “துணிவு” படத்திற்கு 326 திரையரங்குகளும், “வாரிசு” திரைப்படத்திற்கு 325 திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் “துணிவு” திரைப்படத்திற்கு 300 திரையரங்குகளும், “வாரிசு” திரைப்படத்திற்கு 153 திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி மொத்தமாக தமிழகத்தில் 626 திரையரங்குகள் “துணிவு” திரைப்படத்திற்காகவும், 478 திரையரங்குகள் “வாரிசு” திரைப்படத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
எனினும் இணையத்தில் விஜய் ரசிகர்கள் பலரும் தமிழகத்தில் “வாரிசு” திரைப்படத்திற்கு 60% திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிவருகின்றனர். அதே போல் அஜித் ரசிகர்கள் “துணிவு” படத்திற்குத்தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என கூறி விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…