வசூலில் வேணுனா ரஜினி, விஜய் லீடிங்ல இருக்கலாம்! ஆனால் சொத்துல நான்தான் டாப்.. யார் அந்த நடிகர்?

Published on: April 20, 2024
rajini
---Advertisement---

Rajini Vijay: சினிமாவை பொறுத்தவரைக்கும் அது ஒரு வியாபாரம்தான். பல பெரிய பெரிய முன்னணி நடிகர்களுக்குள் ஏகப்பட்ட போட்டிகள் இருந்த வண்ணம் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ரஜினிக்கும் கமலுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்த நிலையில் அதை முற்றிலுமாக மாற்றியவர் விஜய்.

விஜயின் மார்கெட் உயர உயர ரஜினி – கமல் என்று போய் ரஜினி – விஜய் என்று நிலைமை மாறிவிட்டது. இப்போதைய சூழலில் ரஜினி மற்றும் விஜய் இவர்களின் படங்கள்தான் வசூலில் பெரும் சாதனை படைத்து வருகின்றன. கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்களாக இப்போது ரஜினியும் விஜயும்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: உங்களுக்கு மொத்தம் எத்தனை புருஷன்கள்?!.. கோபப்படாமல் கூலாக பதில் சொன்ன அம்பிகா…

இவர்களுக்கு அடுத்த படியாக அஜித்தின் படங்களுக்கு நல்ல ஒரு ஓப்பனிங் இருந்துவருகிறது. அதை அடுத்து சிவகார்த்திகேயன், தனுஷ் என அடுத்த தலைமுறை நடிகர்கள் இருக்கின்றனர். என்னதான் ரஜினியும் விஜயும் வசூலை அள்ளிக் குவித்தாலும் தமிழ் சினிமாவில் பணக்கார நடிகர் என்ற பெருமைக்குரிய நடிகராக கமல்தான் இருக்கிறார் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற நடிகர்களை விட கமலுக்குத்தான் அதிக சொத்து மதிப்பு இருக்கிறதாம். கமலுடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 570 கோடி என்று சொல்லப்படுகிறதாம். இவருக்கு அடுத்த படியாகத்தான் ரஜினி இருக்கிறாராம். ரஜினியின் சொத்து மதிப்பு 450 கோடி. ரஜினிக்கு அடுத்த படியாக விஜயின் சொத்துமதிப்பு 410 கோடி என்றும் சொல்லப்படுகிறதாம்.

இதையும் படிங்க: ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க!.. புளூசட்டமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் ஆண்டனி..

இவர்களுக்கு அடுத்த படியாக அடுத்தடுத்த நடிகர்கள் இருக்கிறார்கள். உலக நாயகன் என்றால் சும்மாவா என இதன் மூலம் சும்மா கெத்துக் காட்டிவிட்டார் கமல் என இந்த தகவல் அறிந்து ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.  அதெப்படி இவர்கள் எல்லாரையும் தாண்டி கமலுக்கு இந்தளவுக்கு சொத்து வந்தது என்று பார்த்தால் ஒரே நேரத்தில் கமல் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதின் மூலம் பல கோடி ரூபாய் சம்பளமாக கமல் பெறுகிறார். சொந்தமாக ராஜ்கமல் நிறுவனம் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரபாஸ் படத்தில் நடிப்பதன் மூலம் பல கோடி சம்பளமும் பெறுகிறார் கமல்.

kamal
kamal

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டி சென்றவர். அரங்கேற்றம் என்ற படத்தில்தான் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இருந்தே கமலின் மீது தமிழ் சினிமா பெரும் நம்பிக்கை வைத்திருந்தது. அதற்கேற்றவாறு இன்று வரை தமிழ் சினிமாவிற்காக கமல் செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி!.. திருட்டுப்பயலே மாளவிகா என்ன பண்றாரு பாருங்க!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.