சும்மா அப்படி கீது... காதலின்னா இப்படி இருக்கனும்... ஓ மணப்பெண்ணே டிரைலர்!

Oh Manapenne
தமிழ் சினிமாவில் இளமையான ஹேண்ட்ஸம் நடிகரான ஹாரிஸ் கல்யாண் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Oh Manapenne
இருந்தும் அவர் யாருக்கும் தெரியாத அடையாளம் தெரியாத நடிகராக இருந்து வந்தார். அந்த சமயத்தில் கிடைத்தது தான் பிக்பாஸ் வாய்ப்பு. அதனை மிகவும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட ஹாரிஸ் தமிழ் பெண்களின் கனவு நாயகனாக மாறினார்.

Oh Manapenne Trailer
அதன் பின்னர் பியார் பிரேமா காதல் என்கிற சிறப்பான படத்தில் நடித்து பெரும் பெரும் அளவில் பேமஸ் ஆகிவிட்டார். படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைத்தது. தாராள பிரபு படம் அவரை உச்சத்தில் அமரவைத்து.

Oh Manapenne Trailer
இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏ.எல் விஜய்யின் முன்னாள் கூட்டாளியான கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள ‘ஓ மணப்பெண்ணே!’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க குக் வித் கோமாளி புகழ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Oh Manapenne Trailer

Oh Manapenne trailer