இந்த இயக்குனர் படத்திலா சிம்பு நடிக்க உள்ளார்.!? வெளியான ஆச்சர்ய தகவல்.!

Published on: January 21, 2022
simbu
---Advertisement---

சிம்பு கடந்த வருடத்தில் ஈஸ்வரன், மாநாடு ஆகிய அடுத்தடுத்த இரண்டு படங்களில்  நடித்து இருந்தார். மாநாடு படம் மிக பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

2020ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஓ மை கடவுளே எனும் திரைப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அவர்களின் இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் படம் வெளியாகி சில மாதங்களிலேயே முடிவானதாம்.

Simbu

ஏற்கனவே அஷ்வத் மரிமுத்து ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கி முடித்துள்ளார். விரைவில் அதன் ரிலீஸ் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஒ மை கடவுளே ஹிந்தி ரீமேக்கை இயக்க அவர் செல்ல உள்ளாராம்.

அத்தனையும் முடித்துவிட்டு வருவதற்கும், சிம்பு தனது அடுத்தடுத்த படங்களை முடித்துவிட்டு வருவதற்கும் சரியாக அமைந்தால் சிம்பு – அஸ்வந்த் மாரிமுத்து இணையும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment