ஐயோ வெட்க வெட்கமா வருதே.. அந்த நடிகரை பார்த்து வழியும் சாய் பல்லவி..

மலையாள சினிமாவில் பிரேமம் எனும் திரைப்படம் மூலம் இந்தியா முழுக்க தெரிந்த நடிகையாக மாறினார் சாய்பல்லவி. அதுவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மலர் டீச்சராக இன்னும் நினைவில் இருக்கிறார் சாய்பல்லவி. அதன் பிறகு தமிழில் தியா, மாரி இரண்டாம் பாகம், என்.ஜி.கே போன்ற படங்களில் சாய்பல்லவி நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கில் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளன.
இதில், அரசியல் திரில்லர் படமான 'NGK' படத்தில் நடிகர் சூர்யா உடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமஷன் பணியின் போது சாய் பல்லவி, தான் சூர்யாவின் பெரிய ரசிகை என்றும், அவரிடம் இருக்கும் அந்த பணிவை கண்டு ரசிப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்களேன் - முதலில் இந்த வேலைய பாருங்க… யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கடிவாளம் போட்ட சூப்பர் ஹிட் இயக்குனர்…
அந்த வகையில், அண்மையில் ஒரு நேர்காணலில் சாய் பல்லவி கலந்து கொண்டார். அப்போது பலவிதமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது அவரிடம், கூட நடித்த தமிழ் ஹீரோக்களை பார்த்து பயந்திருக்கீங்களா என்று கேட்டதற்கு, சாய் பல்லவி ஆமா என்றும் அதுவும் அது சூர்யா சார் தான் என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், பள்ளி பருவத்தில் அவர் நடித்த 'காக்க காக்க' படம் ரொம்ப புடிக்கும் என்றும் நானும் என் தோழியும் அந்த படத்தை பார்த்திருக்கிறோம். அப்போது, அவரை பார்க்கும்பொழுது ரொம்ப வெட்கம் வரும் என்று வெளிப்படையாக தெரிவித்தார்.