Connect with us

அதை சித்தரிச்சிக் காட்டும்போது பயமாகத் தான் இருக்கு…. புரட்சித்தலைவருடன் நடித்த கதாநாயகி எதைச் சொல்கிறார் தெரியுமா?

Cinema History

அதை சித்தரிச்சிக் காட்டும்போது பயமாகத் தான் இருக்கு…. புரட்சித்தலைவருடன் நடித்த கதாநாயகி எதைச் சொல்கிறார் தெரியுமா?

புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் இணைந்து பல படங்களில் நடித்து அசத்தியவர் நடிகை லதா. நினைத்ததை முடிப்பவன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், நாளை நமதே, நேற்று இன்று நாளை ஆகிய படங்களைச் சொல்லலாம். அவரது சுவையான நினைவுகளை இங்கு பகிர்கிறார்.

பிறந்தநாளின்போது படப்பிடிப்பில் இருந்தோம். அப்போ எம்ஜிஆர் வந்து என்ன வேணும் உனக்குன்னு கேட்டார். எனக்கா ஒண்ணும் வேணாம்…இல்ல இல்ல உனக்கு என்ன வேணும் சொல்லு..எனக்கா மோதிரம் வேணும்….என்ன இப்படி இருக்க நீ? நான் 7 வயசுல நாடகக்கம்பெனில போகும்போது எப்படி இருந்தேனோ அப்படி தான் இருக்கன்னாரு. அப்புறம் பிரேக்ல வாங்கிட்டு வரச்சொன்னாரு. 3 கல் வச்ச வைர மோதிரம். அதை இப்பவும் வச்சிருக்கேன்.

mgr, latha

ஒரு சில பரிசுகளை இன்னும் மறக்க முடியாது. நான் அதிமுக தேர்தல் நிதிக்காக பண்ணும்போது இவ்ளோ பெரிய நடராஜர் சிலையை எம்ஜிஆர் கொடுத்தாரு. அதை இன்னும் என் பூஜை ரூம்ல வச்சிருக்கேன்.

அபியும் நானும் சீரியல்ல நான் பாட்டியா நடிச்சிக்கிட்டு இருக்கேன். நல்ல கேரக்டரா இருந்தா யாரு கூட வேணாலும் நடிப்பேன். சிங்கப்பூர் போய் தான் நான் சமையலே கத்துக்கிட்டேன். நடிகை மாதவி தான் எனக்கு கத்துக்கொடுத்தாங்க. ஆயிரத்தில் ஒருவன்ல கூட நடிச்சாங்க. உணவுல பாயா தான் ஸ்பெஷல்.

Actress Latha

படாபட் ஜெயலட்சுமி ரஜினி சாரோட நடிச்ச மகேந்திரன் இயக்கிய படத்தில நடிக்க ஆசைப்பட்டு நடிக்க முடியாமப் போச்சு. ரிஷிகபூரோட இந்திப்படம் நடிக்க வேண்டியது. முடியாமப்போச்சு. கால்ஷீட் ப்ராப்ளம். சிவாஜி சாரோட நிறைய படங்கள். கால்ஷீட்ல பிராப்ளம் வந்தா முதல்ல எம்ஜிஆர் படங்களுக்குத் தான் கொடுப்பேன். இருந்தாலும் இன்னைக்கு வரைக்கும் எம்ஜிஆர் லதான்னு தான் சொல்றாங்க.

அதைத் தான் நான் பெருமையா நினைக்கிறேன். பயோகிராபிய படமா எடுத்து எதுக்கு? எதுக்கு ஒரு பர்சனல் லைப்ப எடுக்கணும்? நாம இன்னும் வெஸ்டர்ன் கல்ச்சர்ல இல்ல. நல்லா காட்டுனா பரவாயில்ல. நிறை குறைகள் ஒரு மாதிரி அதை சித்தரிச்சிக் காட்டும்போது பயமாகத் தான் இருக்கு.

mgr, latha

மறப்போம் மன்னிப்போம் தான் என்னோட பாலிசி. கோபம் வராது. வந்தா திட்டிடுவேன். உடனே மன்னிச்சிடுவேன். எப்பவுமே மன்னிக்குற மனம் தான் நல்லது. எனக்கு கெடுதல் பண்ணினவங்களுக்கு கூட நான் நல்லது தான் பண்ணுவேன். எனக்கு லவ் ப்ரோபஸ் வந்தது ரொம்ப இன்ட்ரஸ்டா இருந்தது.

அப்போ 1970ல நான் நடிச்சிக்கிட்டு இருந்தபோது எனக்கு ஒருத்தர் லட்டர் எழுதுவாரு. அன்புள்ள மனைவிக்கு நான் உனக்கு மணியார்டர் பண்ணிருக்கேன்னு ரூ.30 பண்ணுவாரு. அதைத் திருப்பி அனுப்பிருவேன். நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன். கவலைப்படாம இருன்னு தொடர்ந்து எழுதிக்கிட்டே இருப்பாரு. எனக்கே தெரியாது யாருன்னு…நான் நினைக்கிறேன் அவரு கொஞ்சம் மென்டல்னு. ஒரு நாள் வீட்டுக்கே வந்துட்டாரு. எங்க அம்மா அவரை சத்தம் போட்டு இனிமே இந்தப்பக்கம் வந்த…போலீஸ்ல புடிச்சிக் கொடுத்துருவேன்னுட்டாங்க.

latha

அதை இப்போ நினைச்சாலும் ரொம்ப தமாஷா இருக்கும். கணவர் சிங்கப்பூர்ல பார்த்தேன். ஷோ நடக்கும் போது பார்த்தேன். எனக்கு 2 பசங்க. கார்த்திக், ஸ்ரீனிவாஸ். ரெண்டு பேருமே லண்டன் பிசினஸ் ஸ்கூல்ல எம்பிஏ படிச்சிருக்காங்க. எனக்கும் நான் படிக்க முடியாமப் போச்சு. குழந்தைகள் நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். பெரியவரு லண்டன்ல இருக்காரு. சின்னவர் சிங்கப்பூர்ல இருக்காரு. எப்பவுமே நம்ம மைண்ட ஆக்டிவா வச்சிக்கணும். நான் எப்பவும் பிசியா இருக்கணும்னு நினைப்பேன்.

இப்போ கூட சரவணா ஸ்டோர்ஸ் அவரு ஹீரோவா நடிக்கிற படத்துல அவருக்கு அம்மாவா நடிச்சிக்கிட்டு இருக்கேன். பிரபு, நானு, விஜயகுமார்லாம் நடிக்கிறோம். அந்தக்காலத்துல வருஷத்துக்கு 50 படம் வரும். 40 படம் தேறும். இந்தக்காலத்துல வருஷத்துக்கு 450 படம் வந்தாக்கூட 50 படம் தேறுவதே கஷ்டம். சீரியல்னா உலகத்துல எங்கேயோ இருக்கறவங்க எல்லாம் பார்க்குறாங்க. வீட்டுல இருந்தும் பார்க்கலாம். நல்லா போய் ரீச் ஆகுது. ரசிக்குறாங்க.

இந்த ஜெனரேஷனுக்கும் நம்மள தெரியுது. சீரியல் நடிக்கறது ஒண்ணும் தப்பு கிடையாது. நல்ல விஷயம் தான். அப்பா ராமநாதபுரம் ராஜா. சண்முக ராஜேஸ்வரி சேதுபதி. காங்கிரஸ் கட்சில இருக்காரு. ராஜாஜியோட அமைச்சரவையில் அமைச்சரா இருந்துருக்காரு. காமராஜர் காலத்துலயும் அமைச்சரா இருந்துருக்காரு. அம்மா லீலாவதி. சினிமாவுக்கு வரணும்னு நினைக்கல. எப்படியோ வந்துட்டேன். சின்னப்பொண்ணா இருக்கும்போது மை பாதர் இஸ் கிங்னு பெருமையா சொல்வேன்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top