விஜயகாந்தை பாத்ததும் ஓடி வந்த பாட்டி!.. காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க!.. சமுத்திரக்கனி பகிர்ந்த தகவல்...

by சிவா |
samuthirakkani
X

தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு நுழைந்து ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னேறியவர் விஜயகாந்த். மதுரையிலிருந்து சென்னை வந்து நடிகராக மாறியவர். இவரும் எம்.ஜி.ஆரை போல ஆக்‌ஷன் படங்களில் நடித்து ‘தவறென்றால் தட்டி கேட்பார்’ என்கிற நம்பிக்கையை பாமரர்களிடம் விதைத்தவர். நிஜவாழ்விலும் விஜயகாந்த் அப்படித்தான் என்பது அவருடன் பழகியவர்களுக்கு தெரியும்.

அதோடு எம்.ஜி.ஆரை போலவே விஜயகாந்தும் தனியாக அரசியல் கட்சி துவங்கிவர். எம்.ஜி.ஆருக்கு பின் அரசியல் கட்சி துவங்கிய பல நடிகர்களில் ஓரளவுக்கு மேலே சென்றது விஜயகாந்த் மட்டும்தான். தமிழக சட்டசபையில் எதிர்கட்சிட்சி தலைவராக அமர்ந்தவர்.

rawther1

vijayakanth

இப்போது நடிகராவும், இயக்குனராகவும் வலம் வரும் சமுத்திரக்கனி இயக்கத்தில் நெறஞ்ச மனசு என்கிற படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இந்த திரைப்படம் 2004ம் வருடம் வெளியானது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சமுத்திரக்கனி ‘நெறஞ்சி மனசு படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பாட்டி விஜயகாந்தின் அருகில் வந்து பார்க்க முயற்சி செய்தார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்தும் அவர் திமிறி கொண்டிருந்தார். அதைப்பார்த்த விஜயகாந்த் அவரை விட சொன்னார். அருகில் வந்த அந்த பாட்டி விஜயகாந்தை கட்டி தழுவிக்கொண்டார். அதன்பின் ’ரேஷன் கடைகாரன் அரிசி கம்மியா போடுறான்.. எடை சரியாவே போட மாட்டேங்குறான். அவனை வந்து அடி’ என சொன்னார்.

neranja

அதைக்கேட்டு சிரித்த விஜயகாந்த் ‘அப்படியெல்லாம் அடிக்க முடியாது. அடுத்து நான் அரசியலுக்கு வரேன். எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வை.. அப்புறம் வந்து கேக்குறேன்’ என சொன்னார். அதன்பின் அவரின் உதவியாளர்களை அழைத்து அவருக்கு கிலோ கணக்கில் அரசி கொடுத்து அனுப்பி வைத்தார்’ என சமுத்திரக்கனி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: தனுசுடன் கிசுகிசுக்கப்பட்ட ஐந்து நடிகைகள்!!.. ஆளுதான் சுள்ளான் சூடான சுளுக்கு எடுத்துருவான்!!..

Next Story