More
Categories: Cinema News latest news

“ரேஷன் கடைக்காரனை வந்து அடிங்க கேப்டன்”… கூட்டத்தை பிளந்துக்கொண்டு வந்து புகார் கொடுத்த பாட்டி…

தமிழ் சினிமாவின் கேப்டன் என்று போற்றப்படும் விஜயகாந்தின் பெருந்தன்மையை குறித்தும் பிறருக்கு அள்ளி அள்ளிக்கொடுக்கும் குணத்தை குறித்தும் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அது மட்டுமல்லாது தமிழ்நாட்டுக் கிராமங்களில் ஏழை எளிய மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவராகவும் திகழ்ந்தார்.

இந்த நிலையில் எளிய மக்கள் விஜயகாந்த்தின் மேல் எந்த அளவு மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்த ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Advertising
Advertising

Vijayakanth

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த், நாசர், மனோரமா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நெறஞ்ச மனசு”. இத்திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி இயக்கியிருந்தார். சமுத்திரக்கனி இயக்கிய முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இத்திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

“நெறஞ்ச மனசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டையில் நடந்துகொண்டிருந்தபோது விஜயகாந்த்தை பார்க்கவேண்டும் என ஒரு முதிய பெண்மணி, வெகு நேரமாக படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் இடத்திற்குள் நுழைய போராடிக்கொண்டிருந்தாராம். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் அந்த முதிய பெண்மணி எப்படியாவது விஜயகாந்த்தை பார்த்துவிட வேண்டும் என துடியாய் துடித்தாராம்.

Samuthirakani and Vijayakanth

அப்போது இயக்குனர் சமுத்திரக்கனி, விஜயகாந்த்திடம் “அண்ணே, அந்த பாட்டி உங்ககிட்ட ஏதோ சொல்ல வராங்க” என்று சொன்னதும், விஜயகாந்த், அந்த முதிய பெண்மணியை தடுத்து நிறுத்த முயற்சி செய்துகொண்டிருந்தவர்களிடம் “வழி விடுங்கடா” என கத்தினாராம்.

உடனே அந்த முதிய பெண்மணி ஓடி வந்து விஜயகாந்த்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம். அப்போது அந்த பெண்மணி, விஜயகாந்த்திடம் “ரேஷன் கடையில அரிசியை குறைச்சி குறைச்சி போடுறான். சரியாவே அளக்கமாட்டிக்கான். வந்து அவனை அடி” என்றாராம்.

இதையும் படிங்க: நடுராத்திரியில் ஒரு அமானுஷ்யம்… வடிவேலுவை நோக்கி நடந்து வந்த வெள்ளை உருவம்… கேட்கவே பயங்கரமா இருக்கே!!

Vijayakanth

இதனை கேட்டு சிரித்துக்கொண்ட விஜயகாந்த் “அப்படி எல்லாம் அடிக்க முடியாது. நான் அரசியலுக்கு வருவேன். நீ ஓட்டுப்போட்டு என்னைய ஜெயிக்க வை. அதுக்கப்புறம் வந்து அவனை தட்டிக்கேட்குறேன், சரியா” என்றாராம். அதன் பின் அந்த பெண்மணிக்கு தேவையான அரிசி பைகளை கொடுத்து அவரை அனுப்பிவைத்தாராம் விஜயகாந்த்.

Published by
Arun Prasad

Recent Posts