Categories: Cinema History latest news

சினிமாவை விட்டு விலகும் முடிவில் அஜித்.!? இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் அஜித்குமார். அவரது திரைப்படங்களை திருவிழாவாக கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Also Read

இவர் சினிமாவை தாண்டி அதிகம் விரும்பும் விஷயம் என்றால் அது கார் பந்தயம், பைக் ஓட்டுவது, போட்டோகிரபி ஆகியவையாகும். கார் பந்தயத்தில் பங்கேற்பதன் காரணமாக பெரிய விபத்துக்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடம்பில் பல்வேறு ஆபரேஷன் நடந்து உள்ளது.

இதுகுறித்து இயக்குனர் சுந்தர் சி ஒரு பேட்டியில் குறிப்பிடும் போது, ‘ நான் ஒரு நடிகரின் வளர்ச்சியை பார்த்து வியந்து நிற்கிறேன் என்றால் அது அஜித் தான். ஏன் என்றால் உன்னை தேடி பட ஷூட்டிங்கின்போது அவருக்கு நிறைய ஆபரேஷன் நடந்து இருந்தது. அதனால் அவர் அந்த சமயம் சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருந்தார். கிட்டத்தட்ட அந்த முடிவில் உறுதியாக இருந்த நேரம் அது.

இதையும் படியுங்களேன் – விஜயகாந்த் சார் இது எனக்கு வேணவே வேணாம்னு சொன்னார்.! நான் கேக்கவே இல்லையே.!

அப்போது நாங்கள் தான்,  சார் உங்களை மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் நீங்கள் இப்போது சினிமாவை விட்டு விலக வேண்டாம். இன்னும் கொஞ்ச வருடங்கள் திரைப்படத்தில் நடித்து கொடுங்கள்.’ என கூறினார்களாம்.

அதன் பின்னர் பல்வேறு ஏற்ற இரங்கங்களை சந்தித்தாலும், அதன் பின்னர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் அஜித் குமார்.

Published by
Manikandan