Cinema History
திருமணம் செய்து கொள்ளாத அந்தக் கால மூன்று நடிகைகள்.. யார் யார் தெரியுமா?..
திருமணம் செய்து கொள்ளாமல் வாழக்கூடிய பெண்களை சமூகம் அவ்வளவு சிறப்பாக நினைக்காது. எனினும் சில பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள். அதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உள்ளது.
அந்த வரிசையில் துரை உலகில் தங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த பிரபலமான நடிகைகளான நடிகை காஞ்சனா, குமாரி சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே தங்கள் வாழ்நாட்களை கழித்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் முதலாவதாக நாம் பார்க்கும் நடிகை காஞ்சனா 1970களில் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத கதாநாயகியாக திகழ்ந்திருக்கிறார். சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன் போன்றவர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். 80 கோடி நிகரான சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்து இருக்கும் இவர் தனது பெற்றோர்கள் தனக்கு கடைசி வரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிட்ட காரணத்தால் தான் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார்.
இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பவர் கும்பகோணம் 1965 இல் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சித்திரமே நில்லடி என்ற பாடல் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் மலையாளம் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், சிவக்குமார் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் பல படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவரும் சூழ்நிலை காரணமாக கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்திருக்கிறார்.
கடைசியாக நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சச்சுவை பற்றி பார்க்கலாம். இவர் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நாயகியாகவும் நகைச்சுவை நாயகியாகவும் நடித்திருக்கிறார் 1953 இல் ராணி என்ற படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார். இதனை அடுத்து இவர் அன்னை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தை பஞ்சு இயக்கி இருந்தார்.
நகைச்சுவை நாயகன் நாகேஷோடு சேர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார் குடும்பத்தில் இருந்த வறுமையை நீக்கி எல்லோரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் தனது கலை உலக பணியை செய்து வந்தாக அவரை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.