ஹாய் செல்லம்! இந்த வசனத்துக்கு பின்னாடி இவ்ளோ சோகக் கதையா? ‘கில்லி’ பட வசனகர்த்தா பகிர்ந்த சீக்ரெட்

Gilli Movie: விஜயின் தெரியரில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது கில்லி திரைப்படம். அவருடைய ஆக்சன் சார்ந்த படங்களில் கில்லி திரைப்படம் தான் ஆரம்பத்தில் மிகப்பெரிய வசூலை பெற்ற திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து விஜயின் ஆக்சன் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு பேசப்பட்டது.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் முடிந்தும் இன்னும் நாம் கில்லி திரைப்படம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் அதில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞர்களின் வசனமும் அவர்கள் நடித்த கதாபாத்திரங்களுமே காரணமாகும். இந்த படத்தை 20 வருடத்திற்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க:நீங்க தான் அடுத்த தளபதியா? கேள்விக்கு அல்டிமேட் ரியாக்‌ஷன் கொடுத்த கவின்…

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலேயே கில்லி திரைப்படம் தான் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக அமைந்திருக்கிறது. விஜய்க்காக கில்லி திரைப்படத்தை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரம் பிரகாஷ்ராஜுக்காக கில்லி திரைப்படத்தை பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் பிரகாஷ்ராஜ்.

மேலும் அவர் கூறும் ஹாய் செல்லம் போன்ற வசனம் தான் இன்று வரை அவருக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. இந்த நிலையில் கில்லி திரைப்பட வசனகர்த்தா பரதன் ஒரு பேட்டியின் போது பிரகாஷ்ராஜ் அந்த படத்தில் வில்லனாகவும் ஹியூமராகவும் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்தார். ஆனால் அதற்கு பின்னணியில் அவருக்கு நடந்த சோகக்கதை யாருக்கும் தெரியாது என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கொத்தனாருக்கு வீடு சொந்தம் ஆகுமா?!.. இளையராஜாவுக்கு இருப்பது பேராசை!.. விளாசிய பிரபலம்!..

படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து மற்ற நடிகர்களும் டப்பிங் பேசி முடித்திருக்கும் சூழலில் பிரகாஷ்ராஜின் டப்பிங் மட்டும் வெயிட்டிங்கில் இருந்ததாம். அந்த நேரத்தில் அவர் பிஸியாக இருந்ததனால் அவருக்காக ஒட்டுமொத்த படக்குழுவும் காத்திருந்தார்களாம். ஏப்ரல் 17 ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் ஒரு வாரத்திற்கு முன்பே பிரகாஷ்ராஜ் டப்பிங் பேச வேண்டிய நிலையில் இருக்க அந்த நேரத்தில் தான் அவருடைய ஒன்பது வயது மகன் இறந்த செய்தி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அதனால் ஒட்டுமொத்த பட குழுவும் அப்போது பிரகாஷ்ராஜ் மாமல்லபுரத்தில் இருந்ததனால் அவருடைய மகன் இறப்பிற்கு அஞ்சலி செலுத்த மாமல்லபுரத்திற்கு சென்றிருந்தார்களாம். இறுதிச் சடங்கு எல்லாம் முடித்துவிட்டு ஒரு வார காலம் ஆன பிறகு படக்குழுவில் இருந்து ஒருவர் பிரகாஷ்ராஜிடம் படத்தின் நிலைமையை குறித்து பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: 75 ஆயிரம் சம்பளத்தை விட்டு போனேன்!. அட்லி 3500 கொடுத்தாரு!.. மேடையிலேயே புலம்பிய நடிகர்!..

உடனே நிலைமையை புரிந்து கொண்ட பிரகாஷ்ராஜ் மகன் இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல் உடனே வந்து ஒரே நாளில் அவருடைய டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு சென்றாராம். சொந்த வாழ்க்கையில் எவ்வளவு தான் பிரச்சனை இருந்தாலும் நம்மை நம்பி பணம் போடுகிறவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தன்னுடைய பெரும் துயரத்தையும் பொருட்படுத்தாமல் படத்தின் நிலைமையை அறிந்து உடனே வந்து டப்பிங் பேசி கொடுத்தார் என பரதன் கூறினார்.

 

Related Articles

Next Story