இருந்தா இவங்கள மாதிரி இருக்கனும்பா!.. திரையில் மெய்சிலிர்க்க வைத்த காதல் ஜோடிகள்!..

Published on: February 15, 2023
love
---Advertisement---

காதலர் தினத்தை முன்னிட்டு அவரவர் ஜோடிகளுடன் தங்கள் காதல் அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் ரீல் ஜோடிகளாக இருந்த சில ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறியிருக்கின்றனர். அவர்களும் தங்கள் காதல் அனுபவத்தை இன்ஸ்டா, ஃபேஸ் புக் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

love1
love movies

இந்த நிலையில் திரையில் பார்த்து மயங்கி ச்ச்சச இப்படி பட்ட காதல் மனைவி நமக்கு கிடைக்கலயே என்று ஏங்கும் ஆண்களும் ச்ச்சச இப்படி பட்ட காதல் கணவன் நமக்கு கிடைக்கலயே என்று ஏங்கும் பெண்களும் ரசித்து ரசித்து பார்த்த காதல் ஜோடிகளின் வரிசைகளை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

அலைபாயுதே:

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் , ஷாலினி நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘அலைபாயுதே’. இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதைகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட படமாகும். இந்தப் படத்தில் மாதவன் ஷாலினியை விரட்டி விரட்டி காதலித்திருப்பார். அதை பார்த்த பெண் ரசிகர்கள் ஷாலினியின் மீது ஒரு கட்டத்தில் பொறாமை கொள்ளும்படி மாதவன் அற்புதமாக நடித்திருப்பார். மேலும் அவர்களின் கெமிஸ்ட்ரி பார்ப்பவர்களை ஒரு வித உணர்வுகளுக்கு கொண்டு போய் சேர்த்து விடும்.

love3
mathavan shalini

விண்ணைத்தாண்டி வருவாயா:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்த படத்தில் சைலண்டாக த்ரிஷாவை நோட்டமிடும் சிம்புவின் நடிப்பு பாராட்டும் படியாக அமைந்தது. சிம்புவை வெறுக்கவும் முடியாமல் காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் த்ரிஷாவின் நடிப்பு உச்சி குளிரச் செய்தது. இவர்களின் ஜோடி அனைவரையும் ஈர்த்தது.

love2
simbu trisha

காதலுக்கு மரியாதை:

விஜயின் கெரியரை தூக்கி நிறுத்திய படங்களில் காதலுக்கு மரியாதை படமும் ஒன்று. இந்தப் படமும் முழுக்க முழுக்க காதல் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்தப் படத்தில் விஜய் ஷாலினியிடனான கெமிஸ்ட்ரியை பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயமாக பொறாமை ஏற்படும். காதலியின் மன நிலையை புரிந்து நடக்கும் காதலனாக விஜய் நடித்திருப்பது அனைவரையும் பெருமைப் பட வைத்தது.

love4
vijay shalini

96:

சமீபத்தில் வெளியான காதல் படங்களிலேயே மிகவும் பெருமையாக பேசப்பட்ட படம் 96. தோற்றத்தில் விஜய் சேதுபதி ஒரு விதமான கெட்டப்பில் இருந்தாலும் தன் மனதிற்குள் பொதிந்த ஆசையை சொல்லமுடியாமல் தவிக்கும் காதலனாக மிகவும் ஏக்கத்துடன் நடித்திருப்பார். உருகி உருகி காதலித்த பெண் திருமணமாகி நீண்ட நாள் கழித்து தன் கண் முன்னாடி வந்து நிற்கும் போது எப்படிப் பட்ட உணர்வு ஏற்படும். அதை அழகாக சித்தரித்திருப்பார் மக்கள் செல்வன். விஜய் சேதுபதியையும் த்ரிஷாவையும் ஒரு புனிதமான காதலர்களாக திரையில் காட்டியிருப்பார்கள்.

இதையும் படிங்க : இப்படியெல்லாம் பண்ணுவாரா எம்ஜிஆர்!.. சிவாஜியிடம் ஆடிய போங்காட்டம்!..

love5
vijay sethupathi trisha

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.