Connect with us
saravana store

இளையராஜா கூட வேலை செய்ய முடியாதுங்க.! கடுப்பான வெற்றிப்பட இயக்குனர்…

Cinema History

இளையராஜா கூட வேலை செய்ய முடியாதுங்க.! கடுப்பான வெற்றிப்பட இயக்குனர்…

2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் தான் பருத்திவீரன். இந்த படத்தை இயக்குனர் அமீர் அவர்கள் இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் அறியாத மனசு எனும் பாடலை இளையராஜா அவர்கள் பாடியிருந்தார். அப்பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து இயக்குனர் அமீர் அவர்கள் பேசியுள்ளார்.

யுள்ளார்.

அதில் பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற அறியாத வயசு புரியாத மனசு எனும் பாடலை இளையராஜா பாடுவதற்காக வந்திருந்த பொழுது, பாடலில் தனக்கு இரண்டு இடங்களில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் அதை அவரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் அருகில் இருந்த ஒருவரிடம் சொல்லி கொண்டிருந்ததாகவும், இதனை ஒரு கட்டத்தில் கவனித்த இளையராஜா, என்னய்யா என தன்னிடம் கேட்டார் எனவும் கூறியுள்ளார்.

அப்பொழுது பாடலில் இரண்டாவதாக வரும் அறியாத வயசு புரியாத மனசு எனும் வரியை கொஞ்சம் ஊஞ்சல் மாதிரி பாடினால் நன்றாக இருக்கும் என அவர் இளையராஜாவிடம் கூறியதாகவும், ஆனால் அவர், அவ்வாறு பாடினால் நன்றாகவா  இருக்கும் என கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள் என தான் கூறியதாகவும், அதனால் மீண்டும் தான் சொன்னது போல இளையராஜா பாடிக் கொடுத்தார்.

Director Aamir

 

பாடி முடித்த பின்பு நல்லாவா இருக்கு, ஏதோ கேட்குறீங்க போங்க என தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இன்றும் அந்த பாட்டை கேட்டால் அந்த இரண்டாவது வரி நன்றாக இருக்கும். எனக்கு அந்த பாட்டை கேட்கும் பொழுது அந்த வரி வேறு ஒரு அழகிய எண்ணத்தைக் கொடுக்கும்.

ஆனால் இது போன்று பெரிய ஆட்களுடன் வேலை செய்யும் பொழுது அவர்களிடம் வேலை வாங்குவது சற்று தயக்கமாக இருக்கும். இதனால் பிரச்சினைகளும் சில சமயங்களில் ஏற்படும். எனவே தான் நான் எனக்கு ஏற்ற ஆட்களுடன் வேலை செய்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Continue Reading
To Top