6 மணிக்கு மேல வண்டி நிக்காது.. போட்டோகிராஃபர் மீது கடிந்த ரஜினி!.. அப்படி என்னவா இருக்கும்?..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று இந்த அளவு உயர்ந்திருக்கிறார் என்றால் தொடர்ச்சியாக ரசிகர்களுக்காக அவர் செய்யும் மெனக்கிடுகள் தான் காரணம். ரசிகர்களை திருப்தி படுத்துவதே அவரது நோக்கமாக இருந்து வருகிறது.
சக நடிகரான கமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் ரஜினிக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. ஒட்டுமொத்த தமிழக மக்களையே தன்னுள் அடக்கி காத்துக் கொண்டு வருகிறார். ஒரே மாதிரியான தொடர்ந்து கமெர்சியல் படங்களையே கொடுத்து ரசிகர்களை தன்னுள் வைத்துள்ளார் ரஜினி.
அதனாலேயே குடும்பம் குடும்பமாக வந்து ரஜினியின் படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். ஆரம்பகாலங்களில் எல்லா வகையான கெட்டப்பழக்கங்களையும் கொண்டவராக இருந்திருக்கிறார். மது, போதை, சிகரெட் என அனைத்து பழக்கங்களுக்கும் அடிமையாகி இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: எம்ஜிஆரை எக்குத்தப்பா போட்டோ எடுத்து மாட்டிக்கொண்ட பிரபலம்!.. பொங்கி எழுந்த ஆர்.எம்.வீரப்பன்…
ஒரு சமயம் கவிதாலயா புரடக்ஷனில் அமீர்ஜன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘சிவா’. 1989 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். அப்போது பத்திரிக்கை நண்பர்கள் அனைவரும் புகைப்படம் எடுப்பதற்காக அங்கு வந்திருக்கின்றனர்.
அந்த நேரத்தில் படப்பிடிப்பிலும் ஷார்டுக்கு ஷார்ட் செட் சொல்லி தான் போட்டோ எடுக்கனுமாம். கேமராவை ஸ்டேண்டில் வைத்து ஸ்டெடி பண்ணி தான் எடுக்கனுமாம். அப்போது பத்திரிக்கையாளர் சார்பில் வந்திருந்த போட்டோகிராஃபரான ஸ்டில்ஸ் ரவி ரஜினியை பார்த்து சார் ஸ்டில்ஸ் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி மிகவும் துச்சமாக என்ன நீங்களும் ஷார்ட்டுக்கு ஷார்ட் ஸ்டில்ஸ் எடுக்கனுமா? என்று முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கேட்டாராம்.
அப்போது மாலை 5.30 மணி இருக்கும். ரஜினி இப்படி கேட்டதும் ஸ்டில்ஸ் ரவி கோபமாக கேமராவை மூடிக் கொண்டு கிளம்பி விட்டாராம். அவர் பின்னாடியே ரஜினியின் உதவியாளர் வந்து ரஜினி சார் உங்களை அழைக்கிறார் என்று சொல்ல ஸ்டில்ஸ் ரவியும் மறுபடியும் போனாராம். அவரிடம் ரஜினி சாரி சொன்னாராம். மேலும் எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதனால் தான் ஏதோ அப்படி பேசிவிட்டேன் என்று சமாதான வார்த்தைகளை பேசினாராம்.
அதன் பின் தான் தெரிந்தது ரஜினிக்கும் மாலை 6 மணிஆனாலே குடிப்பாராம். அதனால் தாமதம் ஆகுவதை அறிந்து மிகவும் டென்ஷன் ஆகிவிட்டார் என்று படத்தின் இயக்குனர் அமீர்ஜன் ஸ்டில்ஸ் ரவியிடம் கூறியிருக்கிறார். இந்த தகவலை ஸ்டில்ஸ் ரவியே ஒரு பேட்டியின் போது கூறினார்.