ரிஜக்ட் செய்த நிகழ்ச்சிக்கே விருந்தினராக வந்த பிரபலம்!.. பெரிய பல்பு வாங்கிய ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி!..

super
விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் மக்களால் அதிகம் விரும்பப்படும் நிகழ்ச்சியாக கருதுவது ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி தான். 2006 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக சமீபத்தில் 9வது சீசனை அடைந்துள்ளது.

super1
சில வருடங்களாக இந்த நிகழ்ச்சியை மா.க.பா. ஆனந்தும் பிரியங்காவும் தொகுத்து வழங்குகிறார்கள். இவர்களின்
நகைச்சுவை கலந்த தொகுத்து வழங்கும் விதம் அனைவரையும் ஈர்த்தது. அதன் காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் குடும்பங்களாக பார்க்கக் கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மாறியிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆர்.ஜே.பாலாஜியும், இசையமைப்பாளர் சாம் சி.எஸும் வந்திருந்தார்கள். அப்போது பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ஒரு காலத்தில் இந்த நிகழ்ச்சியால் நான் ரிஜக்ட் செய்யப்பட்டவன் என்று கூறினார்.

sam cs
அதைக் கேட்ட நடுவர்களான பென்னி மற்றும் சுவேதா இருவரும் வாயடைத்துப் போனார்கள். 2008 ஆம் ஆண்டு சாம் சி.எஸ் ரிஜக்ட் செய்யப்பட்டாராம். அதைப் பற்றி குறிப்பிட்டு பேசிய சாம் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் பாடகராகலாம், ஆனால் தோற்றால் கம்போசராகலாம் என்று கூறினார்.
இதையும் படிங்க : கிளைமேக்ஸை மாற்ற சொன்ன விஜய்.. அவரை தூக்கிவிட்டு வேறு ஹீரோவை போட்ட இயக்குனர்..
மேலும் நிகழ்ச்சி முடியும் வரை சாம் தான் ரிஜக்ட் செய்யப்பட்டதை பல தடவை சொல்ல தொகுப்பாளினி பிரியங்கா ‘சார் அத வேற திரும்ப திரும்ப சொல்லி எங்கள கேவலப்படுத்தாதீங்க சார்’ என்று சொன்னார். சாம் சி.எஸ். சமீபத்தில் வெளியான ‘பகாசூரன்’, ‘விக்ரம் வேதா’, ‘அடங்கமறு’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

sam cs
மேலும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப்படங்களிலும் இசையமைத்து வரும் இவர் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஒரு காலத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் ரிஜக்ட் செய்யப்பட்ட சாம் ஒரு விருந்தினராக வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் திகைத்தார்.