Connect with us

நக்மா மொபைலுக்கு வந்த மெசேஜ்… திடீரென காணாமல் போன லட்ச ரூபாய்… இவ்வளவு பெரிய மோசடியா?

Nagma

Cinema News

நக்மா மொபைலுக்கு வந்த மெசேஜ்… திடீரென காணாமல் போன லட்ச ரூபாய்… இவ்வளவு பெரிய மோசடியா?

1990களில் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நக்மா. இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்தார்.  இவ்வாறு இந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்த நக்மா, கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Nagma

Nagma

“காதலன்”, “பாட்ஷா”, “பிஸ்தா” போன்ற திரைப்படங்களில் நக்மாவின் நடிப்பை நம்மால் மறக்கமுடியாது. அந்தளவுக்கு மிகவும் இளமை துள்ளலோடு தனது திரைப்படங்களில் வலம் வந்தார் நக்மா. இந்த நிலையில் நக்மா, ஒரு மர்ம கும்பலால் லட்ச ரூபாய் பறிகொடுத்த சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது.

நக்மா கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய, அந்த வங்கியின் பெயரில் இருந்து அவரின் மொபைலுக்கு ஒரு லிங்க் வந்ததாக கூறப்படுகிறது. அந்த லிங்க்கை நக்மா கிளிக் செய்தவுடன் வங்கி அதிகாரி போல் ஒருவர் நக்மாவின் மொபைலுக்கு அழைத்து, “உங்களுக்கு கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்வதற்கு உதவுகிறேன்” என கூறியிருக்கிறார்.

Nagma

Nagma

அந்த மர்ம நபர் தனது அழைப்பை துண்டித்தவுடன் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் பறிபோயிருக்கிறது. ஆனால் நக்மாவுக்கு எந்த வித ஓடிபியும் வரவில்லை என கூறப்படுகிறது.

எனினும் லட்ச ரூபாய் பறிபோனதை தொடர்ந்து நக்மா மொபைலுக்கு 20க்கு மேற்பட்ட ஓடிபி மெசேஜ்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடியை தொடர்ந்து நக்மா மும்பை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இப்புகாரின் அடிப்படையில் மும்பை சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆண் நடிகரை பெட் ரூம்க்கு அழைத்த தயாரிப்பாளர்… மனம் திறக்கும் ஷகீலா பட ஹீரோ…

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top