ஜிவி பிரகாஷை தொடர்ந்து அடுத்த விவகாரத்து அந்த ஹீரோவா?!.. என்னப்பா சொல்றீங்க!...

by சிவா |   ( Updated:2024-06-20 07:48:55  )
gossip
X

தமிழ் சினிமா உலகில் விவாகரத்து என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. சீனியர் நடிகர்கள் கமல், பார்த்திபன் என பலரும் மனைவியை பிரிந்தவர்கள்தான். அதேநேரம், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், ரஜினி, அர்ஜூன், சத்தியராஜ், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்களும் மனைவியுடன் இணக்கமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனின் மகன் நாகசைத்தன்யாவை திருமணம் செய்தார். ஆனால், சில வருடங்களில் அந்த காதல் கசந்து போனது. ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த நடிகர் தனுஷ் 17 வயதில் மகன் இருந்த நிலையில் மனைவியை பிரிந்தார். இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

அதேபோல், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இப்படி திரைத்துறையில் விவகாரத்து அதிகரித்து விட்டது. இந்நிலையில்தான், அடுத்து ஒரு இளம் நடிகர் மனைவியை பிரிய முடிவெடுத்திருக்கிறார் என செய்திகள் கசிந்திருக்கிறது.

இவரின் அப்பா முன்னாள் எடிட்டராக இருந்தவர். தெலுங்கில் ஹிட் அடித்த ஒரு படத்தை அண்ணன் இயக்க இந்த நடிகர் அதில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவே அந்த படத்தின் தலைப்பும் அவரின் பெயருக்கு முன்பு சேர்ந்து கொண்டது. பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக அவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். காதல் திருமணம் செய்த இவருக்கு 2 மகன்களும் உண்டு. இந்நிலையில்தான், இவர் தனது மனைவியை பிரிய முடிவெடுத்திருக்கிறார் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது.

நீதிமன்றத்தில் விவாகரத்து பெறுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருப்பதாகவும், விரைவில் அந்த நடிகரே இதை சமூகவலைத்தளங்களில் அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

Next Story