Connect with us

ஒரே படத்தோட சோலி முடிஞ்சது..! வந்தார்கள்… போனார்கள்… கதாநாயகர்கள்… கதாநாயகிகள்…

Cinema History

ஒரே படத்தோட சோலி முடிஞ்சது..! வந்தார்கள்… போனார்கள்… கதாநாயகர்கள்… கதாநாயகிகள்…

கதாநாயகர்களும் சரி. கதாநாயகிகளும் சரி. திறமை மட்டும் இருந்தால் போதாது. கூடவே அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் திரையுலகில் நிலைத்து நிற்க முடியும். ஏன் என்றால் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது உங்களுக்கு அதற்கான காரணம் தெரியும்.

படம் நல்லா ஓடி ஹிட் ஆன போதும் ஒரு சிலர் ஒரு படத்திற்குப் பின் தாக்குப்பிடிக்க முடியாமல் சினிமாவில் காணாமல் போய் உள்ளனர். இவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் ஒருசிலரைப் பற்றிப் பார்க்கலாம்.

16 வயதினிலே டாக்டர் சபீர்

sabeer

16 வயதினிலே படத்தில் வருகிற டாக்டர் சபீர் இந்தப்படத்திற்குப் பிறகு காணாமல் போய்விட்டார். சில தமிழ் சீரியல்கள் சில தமிழ்ப்படங்களில் மட்டும் தான் அவரைப் பார்க்க முடிந்தது. அதற்குப் பிறகு ஆளையே காணோம். இதே படத்தில் வரும் ரஜினி, கமல் ஆகியோர் ஹிட் ஆனார்கள்.

என்னுயிர் தோழன் பாபு

என்னுயிர் தோழன் பாபு பாரதிராஜாவின் அறிமுகம். பெரும்புள்ளி படத்தில் நடித்தார். பெரிய அளவில் பேசப்பட்டது. சுமார் 10 படங்களில் புக் ஆனார். ஒரு விபத்துல கீழே விழுந்ததுக்குப் பின் இப்போ வரை பெட்ல தான் இருக்காரு.

குணா படத்தில் நடித்த ரோஷினி. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் தொடர்ந்து படவாய்ப்புகள் வரவில்லை. அதற்குப் பின் பாம்பே சென்ற அவர் ஒருசில விளம்பரங்களில் நடித்துள்ளதாகத் தெரிகிறது.

7ஜி ரெயின்போ காலனி

செல்வராகவன் இயக்கத்தில் இது ஒரு சூப்பரான படமாக வெளியானது. ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். ஆரண்யா காண்டம், பொன்னியின் செல்வன் படத்தோட சரி. இதற்கு அப்புறம் ஆள் அட்ரஸ் இல்லாம போயிட்டாரு. நல்ல திறமையான நடிகர் தான். ஆனால் எங்கேயோ மிஸ் ஆயிடுச்சு.

ரேணுகா மேனன்

ரேணுகா மேனன் தாஸ் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் கதாநாயகி. அப்புறம் ஆர்யாவுடன் ஒரு படம். இன்னும் 3 மலையாளப்படங்கள் நடித்தார். ஆனால் தமிழ்சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. லண்டன் போனதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆஹா படத்தில் ஹீரோவாக நடித்தார் ராஜீவ் கிருஷ்ணா. படமும் ஹிட். பெரிய சாக்லேட் ஹீரோவாக வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குப் பின் காணாமல் போனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். மறுபடியும் காணாமல் போய்விட்டார்.

ஈரமான ரோஜாவே சிவா

siva

ஈரமான ரோஜாவே சிவா இந்தப்படத்திற்குப் பிறகு காணாமல் போனார். இது ஒரு பெரிய ஹிட் படம். 90ஸ் ஹிட்டான ஹீரோக்களுக்கே உரிய அத்தனை திறமைகளையும் கொண்டவர். ஒரு சில தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு நடிக்கவில்லை.

காதல் மன்னன் மானு

காதல் மன்னன் மானு அஜீத் பட கதாநாயகி. படம் பெரிய அளவில் ஹிட் ஆன போதும் இவர் ஏன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இது அவருக்கே வெளிச்சம். டாக்டர கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிட்டாங்க.

நண்பர்கள் நீரஜ்

நண்பர்கள் நீரஜ். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம். இது ரொம்ப சூப்பரான படம். பாடல்களும் ஹிட். ஆனா அதுக்கு அப்புறம் படமே நடிக்கவில்லை.

sankar

இன்னும் நிறைய கதாநாயகிகள், கதாநாயகர்கள் இருக்காங்க. பாரதிராஜா படத்தோட ஹீரோ காதல் ஓவியம் கண்ணன், ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஹீரோ சங்கர் அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நவ்தீப், சுள்ளான் படத்தில் நடித்த சிந்து துலானி, முகமூடி படத்தில் நடித்த பூஜா, மோனிஷா என் மோனலிசா ராமகாந்த் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top