ஒரு படத்துக்கு இரண்டு கிளைமேக்ஸ்!.. கோல்மால் செய்த படக்குழு!. அட அந்த விஜய் படமா?!..
Vijay Movie: விஜய் சினிமாவில் அவருக்கு தான் அதிகமான முக்கியத்துவம் இருக்கும். கூட இருக்கும் நாயகிக்கு அதிக பட்சம் பத்து சீன் கொடுத்தாலே அதி ஆச்சரியம் தான். அந்த வகையில் அவருடன் நடித்த ஒரு நாயகிக்கு க்ளைமேக்ஸிலே ஆப்பு வைத்த சம்பவமும் நடந்து இருக்கிறதாம்.
விஜய் சினிமாவிற்கு அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் அழைத்து வந்தார். முதலில் சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பினை பெறவில்லை. அவருக்கு தனி அடையாளத்தினை கொடுத்த திரைப்படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம் தான். 1996ம் ஆண்டு வெளியான இப்படத்தினை இயக்குனர் விக்ரமன் இயக்கி இருந்தார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. டி. இமானை தொடர்ந்து அவரது முதல் மனைவி ஓபன் பேட்டி!..
இப்படத்தில் விஜய், சங்கீதா, நாகேஷ், நம்பியார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். ஒரு தலைக்காதலியின் காதலை சேர்த்து வைக்க ஒரு கிராமத்துக்கு வருகிறார் விஜய். அவர் இருவீட்டாருக்கும் இருக்கும் பிரச்னையை சரி செய்து சேர்த்து வைக்கிறார்.
அவர் பொய் சொல்லி பிள்ளையாக வரும் தம்பதி உண்மையான மகளாக வருகிறார் சங்கீதா. கடைசியில் காதலி திருமணம் முடிந்ததும் விஜய் கிளம்பி செல்வதுடன் படம் முடிந்து விடும். ஆனால் இந்த படத்தில் இரண்டு கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டதாம்.
படத்தில் வந்த க்ளைமேக்ஸுடன் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டு விஜய் செல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்ததாம். அந்த க்ளைமேக்ஸ் தான் படத்தில் வரும் என நடிகை சங்கீதாவும் நினைத்து இருந்தாராம். படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்த எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை.
இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த லியோ படத்தின் கதை? அப்போ சஞ்சய் தத்துக்கும் விஜய்க்கும் இந்த உறவு தானா?
படத்தின் ப்ரீவியூவில் போய் பார்க்கும் போது தான் அவர் எதிர்பாராத கிளைமேக்ஸை படத்தில் இணைத்து இருந்தனராம். இதை பார்த்தவருக்கே அதிர்ச்சியாகி விட்டதாம். இதே பேட்டியில் தான் விஜய் படம் என்பதற்காக இதில் நடிக்கவில்லை. விக்ரமன் படத்தினால் தான் இதில் நடித்தேன் என்றும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.