Director KarthikSubbaraj: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிய நாளைய இயக்குனர் திரைப்படத்தின் மூலம் இயக்குனரானவர் கார்த்திக் சுப்பாராஜ். இவர் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியினாலேயே இயக்குனராக மாறியவர்.
இவர் பீட்சா, ஜிகர்தண்டா போன்ற பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றிப்படங்களாகவே அமைந்தன. மேலும் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களையும் இயக்கி சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளாத்தை உருவாக்கியுள்ளார்.
இதையும் வாசிங்க:யோகிபாபுவை புறக்கணித்த சிவகார்த்திகேயன்.. பின்ன யாரா இருந்தா என்ன?!.. அடிச்ச அடி அப்படி!
இவரின் முக்கியமான படங்களில் ஒன்று நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம். இப்படம் இவரின் சினிமா வரலாற்றிலையே மிகவும் முக்கியமான திரைப்படமாம். மேலும் இவர் மேயாதமான் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார்.
இவர் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. சினிமாவை தாண்டி இவர் பல வெப் சீரிஸ்களையும் இயக்கியுள்ளார். கள்ளசிரிப்பு, நவரசா போன்ற பல வெப் சீரிஸ்களின் மூலம் இவர் தனது திறமையினை காட்டியுள்ளார்.
இதையும் வாசிங்க:டூயட்டுக்கு டாட்டா! இப்படி இறங்கிட்டா பெண் ரசிகைகளின் நிலைமை? சூப்பரான சூர்யா43 அப்டேட்
இவர் முதலில் இயக்கிய திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த பீட்சா. ஆனால் இப்படத்திற்கு முன்னரே இவர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் கதையை தயார் செய்துவிட்டாராம். இவர் தனது சினிமா அனுபவத்தை தற்போது ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இவருக்கு தயாரிப்பாளரை கவரும் வகையில் கதை சொல்ல தெரியாதாம். பொதுவாக எந்தவொரு படமானாலும் கதையை எழுதிவைத்துவிட்டுதான் அதை தயாரிப்பாளரிடம் படிக்க சொல்வாராம். அப்படியான ஒரு சம்பவம்தான் ஜிகர்தண்டாவிலும் நடந்துள்ளது.
ஜிகர்தண்டா கதையை எழுதி முடித்துவிட்டு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளார். அப்போது அந்த கதையை கேட்ட தயாரிப்பாளர் கதையை சொல்லி கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டாராம். அதனை பார்த்ததும் இவருக்கு கதை கூற வரவில்லையாம்.
அப்போது முழித்துகொண்ட அந்த தயாரிப்பாளர் மேலும் கதையை கூறுங்கள்.. நான் தூங்கவில்லை என கூறினாராம். ஆனால் கார்த்திக் சுப்பாராஜ் அதன்பின் அந்த கதையை ஒரு நிமிடத்தில் சுறுக்கமாக கூறினாராம். ஆனால் அந்த கதையை அந்த தயாரிப்பாளர் ரிஜெக்ட் செய்து விட்டாராம். அதன்பின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் இவரது கதையை ஏற்றுகொண்டு இப்படத்தை தயாரித்துள்ளார்.
இதையும் வாசிங்க:டம்மி துப்பாக்கி.. அட்டக்கத்தி.. வெறும் பில்டப்பு!.. லோகேஷை பங்கம் பண்ணிய மன்சூர் அலிகான்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…