சூர்யா படம் பார்த்து ஐபிஎஸ் அதிகாரி ஆயிட்டாரே!.. நடிகர் பகிர்ந்த தகவல்!..

Retro movie: சினிமாவே ஒரு இன்ஸ்பிரேசன்தான் என சொல்வார்கள். அதாவது நிஜ வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் இயக்குனர்களுக்கு கதையாக தோன்றுகிறது. அதில், கொஞ்சம் கற்பனை கலந்து திரைக்கதையாக உருவாக்கி படமாக எடுக்கிறார்கள். நிஜ வாழ்வில் நடக்கவே நடக்காத விஷயங்களை வைத்து படமாக எடுக்கும்போது ரசிகர்கள் அதில் தங்களை தொடர்புபடுத்தி கொள்ளமாட்டார்கள்.
நிஜ வாழ்வில் நடப்பவை சினிமாவாக மாறுவது போலவே சினிமாவை பார்த்து தங்களின் வாழ்க்கையை வடிவமைத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். அது நல்ல விஷயமாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. சினிமாவை பார்த்து நான் கொலை செய்தேன் என ஒருவர் சொன்னால் அது இயக்குனரின் தோல்வி. அதுவே, இந்த சினிமாவை பார்த்தபின் என்னுடைய தவறை நான் திருத்திகொண்டேன் என ஒருவர் சொன்னால் அது இயக்குனரின் வெற்றி.
அந்தவகையில், சூர்யா படம் பார்த்து ஒருவர் போலீஸ் அதிகாரி ஆன கதை பற்றி பார்ப்போம். கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் காக்க காக்க. இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதுவரை சாக்லேட் பாயாக மட்டுமே நடித்து வந்த சூர்யாவை இந்த படத்தில் வேறுமாதிரி காட்டியிருந்தார் கவுதம் மேனன்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் என்பதால் அதற்கு ஏற்ப உடல்மொழியை மாற்றி வேறு மாதிரி நடித்திருந்தார் சூர்யா. அவரை அப்படி நடிக்க வைத்தது கவுதம் மேனன் என்றே சொல்ல வேண்டும். போலீஸ் அதிகாரிகளின் வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சனைகளெல்லாம் வரும் என காட்டியிருந்தார்.
இந்த படத்திற்கு பின்னர்தான் சூர்யா ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ள ரெட்ரோ படம் கூட ஒரு பக்கா ஆக்சன் படம்தான். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாகரன் ‘காக்க காக்க படத்தை காலேஜ் கட் பண்ணிட்டு போய் பார்த்திருக்கோம். எனக்கு 20-25 அரியர் இருந்தபோதும் ஐ.பி.எஸ் ஆகணும்னு ஆசை வந்தது. 2 முறை தேர்வு எழுதி பெயில் ஆயிட்டேன். என்னுடைய நண்பர் ஒருவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேசிய அளவில் 3ம் படத்தை பிடித்த போதும் ஐ.பி.எஸ்-யையே தேர்வு செய்தார். அதற்கு இன்ஸ்பிரேஷன் சூர்யா சார்தான்’ என பேசினார்.