Connect with us

Cinema History

அஜித்தின் சூப்பர்ஹிட் பாடல்… ஹீரோக்கு கங்கை அமரன்… ஹீரோயினுக்கு வாலி.. என்னங்க இப்படி?

Ajith: அஜித் நடிப்பில் ரிலீஸாகி சூப்பர்ஹிட்டான ஒரு பாடலின் பெண் வரிக்கு வாலியும், ஆண் வரிக்கு கங்கை அமரனும் எழுதி இருந்தார்களாம். இதுகுறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் மங்காத்தா. அர்ஜூன், திரிஷா, ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி, மகத், வைபவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் ஆனது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: லைக்கா மீது அஜித்துக்கு கோவமா? ‘ஏகே 63’ பட போஸ்டர் வெளியிட்டதன் பின்னனி காரணம் இதுதானா?

படத்தின் எல்லா பாடல்களுமே ஹிட்டானது. முதல்முறையாக பெண்களுக்கான லஃப் பெயிலியர் சாங் எழுதியது இப்படத்தில் தான். அதுப்போல, இதில் வாடா பின்லேடா பாடலுக்கு வாலி மற்றும் கங்கை அமரன் இருவருமே எழுதி இருப்பார்கள். இதற்கு பின்னர் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறதாம்.

முதலில் வாடா பின்லேடா பாடல் முழுவதுமே பெண் பாடுவது போல அமைக்கப்பட்டிருந்ததாம்.  அதை பாடகி  சுசித்ரா பாடிவிட்டு சென்று விடுகிறார். ஆனால் திடீரென யுவன் கடைசியில் ஆண் பாடுவது போல சில வரிகள் வேண்டும் என அடம் பிடித்தாராம். நேரமும் 11 தாண்டி விட்டது. பாடலை எழுதிய வாலிக்கு கால் செய்து கேட்பதில் யுவனுக்கும் வெங்கட்டுக்கும் பயப்பந்து உருண்டதாம்.

இதனால் அந்த பாடலை பாட இருந்த பாடகர் கிரிஷை கால் செய்து கேட்க சொல்கிறார். ஏனெனில் வாலி அந்த சமயத்தில் தான் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் செய்த கிரஷ் இப்படி கடைசியில் சில வரிகள் வேண்டும் என கேட்டாராம். இதைக் கேட்டு கடுப்பான வாலி, பாவிகளா நானே உடம்பு சரியாமல் மருத்துவமனையில் இருக்கிறேன். இப்ப போய் இதை கேட்கிறீங்களேடா.

இதையும் படிங்க: ஒரு ரூபாய்க்கு செக் கொடுத்த கமல்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்!.. ஆளவந்தானில் நடந்த அக்கப்போறு..

நீ உன்ன பண்ணு கங்கை அமரனுக்கு அந்த வரிகளை அனுப்பு. அவனிடம் என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி போனை வைத்து விடுகிறார் வாலி. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு கங்கை அமரனுக்கு கால் செய்து, டேடி இப்படி சில வரிகள் வேண்டும் எனக் கேட்டாராம். அவரும் எழுதிக்கொடுத்த பின்னரே யுவன் பாடலின் கம்போசிங்கை முடித்தாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top