Indian
தமிழ்சினிமாவில் ஒரே கதை அம்சம் கொண்ட படங்கள் ஏராளமாக வந்துள்ளன. உதாரணத்திற்கு அண்ணன் தங்கை பாசம் என்றால் அதை மையமாகக் கொண்டே பல படங்கள் வந்துள்ளன. அதே போல் அப்பா மகன் உறவு, அம்மா பிள்ளை உறவு, சகோதர பாசம், கிராமிய கதை, குடும்பக்கதை, நகைச்சுவை படங்கள், சயின்டிபிக் படங்கள், ரோபோட் படங்கள் என பல ஒன்றையொன்று ஒத்துள்ளவையாகவே காணப்படுகின்றன.
கதைக்குப் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் பழைய படங்களின் கதையைத் தூசு தட்டி அவற்றை 2ம் பாகமாகவும் எடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். கதைக்குத் தான் பஞ்சம் என்றால் டைட்டிலுக்கும் பஞ்சம் வந்து பழைய பட டைட்டில்களை அப்படியே வைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் இப்போது நாம் ஒரே கதை அம்சம் கொண்ட பல படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
பயணங்கள் முடிவதில்லை, வாழ்வே மாயம் என்ற இருபடங்களிலுமே கதாநாயகன் கேன்சரால் அவதிப்படுவார். காதலியிடம் இருந்து விலகிச் செல்வார். அவரைத் திருமணம் செய்யாமல் பிடிக்காதது போல் விலகுவார். 1982ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்த படம் பயணங்கள் முடிவதில்லை. பாடல்கள் அனைத்தும் இளையராஜாவின் இசையில் பிரபலமாயின.
அதே போல் 1982ல் வெளியான படம் வாழ்வே மாயம். ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் கங்கை அமரன் இசையில் வெளியான படம். கமல், ஸ்ரீதேவி நடிப்பில் சக்கை போடு போட்ட படம்.
கே.பாக்யராஜின் சின்னவீடு படத்தை கார்த்திக்கின் கோபுரங்கள் சாய்வதில்லை படம் போல் உள்ளது என ஒப்பிடுகின்றனர். நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் மௌனராகம் போலவும், மூடுபனி படம் காதல் கொண்டேன் படம் போலவும், 16 வயதினிலே படம் டார்லிங் டார்லிங் டார்லிங் படம் போலவும், கமலின் சிவப்பு ரோஜா படம் சிம்புவின் மன்மதன் படத்தையும் ஒத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற நகைச்சுவை படம் பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தையும் ஒத்திருக்கின்றன என்கின்றனர்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் ஒன்லைன் ஸ்டோரியே 8 தோட்டாக்கள் என்றும் கூறுகின்றனர். இளைஞர்களின் கனவுகளைத் தூண்டி காதலில் கிறங்க வைத்த சேரனின் ஆட்டோகிராப் படமே மேற்குத் தொடர்ச்சி மலையானது.
பொதுவாக தமிழ்சினிமா தான் பிற மாநில மொழிப்படங்களையும், ஹாலிவுட் படங்களையும் காப்பி அடித்து வெளியிடுவர். ஆனால், அதிசயமாய் தமிழ்சினிமாவை ஹாலிவுட் படம் ஒன்று காப்பி அடித்துள்ளது. அதுதான் ஆச்சரியம். வியட்நாம் வீடு படத்தைக் காப்பி அடித்தே ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தை எடுத்துள்ளார் என்கின்றனர் நெட்டிசன்கள்.
1996ல் இந்தியன் படம் லஞ்சத்திற்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 2001ல் அஜீத் நடித்த சிட்டிசன் படமும் லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட படம் தான். சாமுராய் படம் 2002ல் லஞ்சத்துக்கு எதிராக விக்ரம் போராடுவார். இந்தப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கினார்.
2002 ல் ரமணா படத்திலும் விஜயகாந்த் லஞ்சத்திற்கு எதிராகத் தான் போராடுவார். 2005ல் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்திலும் விக்ரம் லஞ்சத்திற்கு எதிராக வேட்டையாடுவார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…